சிங்கப்பூரில் தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் கைது..!!

சிங்கப்பூரில் தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் கைது..!!

உட்லண்ட்ஸ் சோதனை சாவடியில் 37 வயது நபர் கைது செய்யப்பட்டார்.

இது குறித்த அறிக்கையை குடி வரவு மற்றும் சோதனை சாவடிகள் ஆணையம் வெளியிட்டுள்ளது. 37 வயதான நபர் நேற்று (ஏப்ரல் 7) காலை சுமார் 6:36 மணி அளவில் உட்லண்ட்ஸ் சோதனை சாவடி பேருந்து நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த சமயத்தில் அவரது கால் சட்டையில் சந்தேகப்படும் விதமாக பொருட்கள் இருப்பதை பாதுகாப்பு பணியாளர்கள் கண்டறிந்து அவரை மேலதிக சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

அவர் கையில் வைத்திருந்த பைகளை எக்ஸ்ரே ஸ்கேனரில் வைத்த பிறகு உடல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அப்போது அந்த நபர் அந்த பொருட்களுடன் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றிருக்கிறார்.

இந்த தகவல் உடனடியாக சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்ட சோதனை சாவடி பகுதிக்குள் தப்ப முயன்ற அந்த நபர் அதிகாரிகளிடம் சிக்கினார்.

அங்கு நடத்தப்பட்ட சோதனையில் ஐந்து பொட்டலங்கள் கடத்தப்பட்ட சிகரெட் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன.

உடனேயே சம்பவ இடத்தில் அந்த நபர் கைது செய்யப்பட்டு மேலும் விசாரணைக்காக காவல் படை மற்றும் சுங்க துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அங்கீகரிக்கப்பட்டுள்ள அதிகாரியின் சோதனை அறிவுறுத்தல்களுக்கு ஒத்துழைக்க தவறிய காரணத்திற்காக உள்கட்டமைப்பு பாதுகாப்பு சட்டம் 2017 இன் பிரிவு 28(2) ஐ மீறிய குற்றத்திற்காக இவர் மீது இன்று (ஏப்ரல் 8) குற்றம் சாட்டப்பட உள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவருக்கு $20,000 அதிகமாக அபராதமும் அல்லது இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் அல்லது இரண்டும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK