பூன் கெங் பகுதியில் நடந்த அண்டை வீட்டார் தகராறு வைரல்..!!!
சிங்கப்பூர்: பூன் கெங் சாலை பகுதியில் உள்ள HDB அடுக்குமாடி குடியிருப்புகளில் அண்டை வீட்டார்கள் பிரச்சினையில் ஈடுபட்டதை காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
அந்த காணொளியில், குடியிருப்புக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த சந்திர புத்தாண்டு அலங்காரங்களை ஒரு பெண் கிழித்து தரையில் வீசுவதை காணலாம்.
மேலும் இச்சம்பவம் குறித்து புகார் கிடைத்துள்ளதாக போலீசார் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த ஜாலான் பெசார் குழுத் தொகுதி எம்.பி. லுவோ ஷோயென், மக்கள் அடர்த்தியான சமூகங்களில் பரஸ்பர புரிதலும் பொறுமையும் அவசியம் என கூறினார். பழிவாங்கும் நடவடிக்கைகள் பிரச்சினைகளை மேலும் தீவிரப்படுத்தும் என்றும், சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்களுடன் இணைந்து இந்த விவகாரம் கவனிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பூன் கெங் மற்றும் வாம்போவா பகுதிகளில் நீண்ட காலமாக இணக்கமான அண்டை வீட்டார் உறவுகள் இருந்து வந்தாலும், சில நேரங்களில் விரிசல்கள் தோன்றுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த விவகாரம் சமூக மத்தியஸ்தம் மற்றும் அக்கம் பக்க தகராறு தீர்ப்பாயம் வழியாக தீர்வு காண முயற்சிக்கப்பட்டு வருவதாகவும், புத்தாண்டை முன்னிட்டு குடியிருப்பாளர்கள் பரஸ்பர புரிதலுடன் அமைதியான வாழ்வை உருவாக்க வேண்டும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.