சிங்கப்பூரின் பொது போக்குவரத்து வரலாற்றிலேயே ஒரு முக்கிய பங்காக ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் முதல் பேருந்து தற்போது வந்தடைந்துள்ளது.
இதனோடு மேலும் ஐந்து தானியங்கி பேருந்துகள் இந்த ஆண்டின்(2026) இரண்டாவது பாதியில் இருந்து மரினா பே, ஒன்-நார்த் பகுதிகளில் பேருந்து சேவை சோதனை செய்யப்பட உள்ளது.
மரினா பே பகுதியில் இயங்கும் பேருந்து சேவை 400, ஒன் நார்த் பகுதியில் இயங்கும் பேருந்து சேவை 191 ஆகியவற்றில் இந்த பேருந்துகள் சோதனைக்கு பயன்படுத்தப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம்(LTA) நேற்று (மார்ச் 25) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சாலை பயன்பாட்டிற்கு முன்னதாகவே அனைத்து பாதுகாப்பு செயல்பாட்டு தர நிலைகளையும் உறுதிப்படுத்துவதற்கு இந்த பேருந்துகள் தீவிர சோதனைகளுக்கு உட்படுத்தப்படும் என LTA தெரிவித்துள்ளது.
பேருந்துகள் பயன்பாட்டிற்கு முழுமையாக தயாரானதும் தற்போதுள்ள ஓட்டுநர்கள் மூலமாக இயக்கப்படும் சாதாரண பேருந்துகளுடன் இந்த பேருந்துகளும் இயங்கும் என தெரிவித்துள்ளது.
மார்ச் மாத தொடக்கத்தில் சிங்கப்பூருக்கு வந்து இறங்கிய இந்த அதிநவீன பேருந்தினுடைய அம்சங்களை காட்டும் விதமாக ஒரு காணொளியை LTA வெளியிட்டு இருக்கிறது. பேருந்தின் முக்கிய அம்சங்கள்: சக்கர நாற்காலி பயன்பாட்டாளர்களுக்கான தனி இட வசதி ஒதுக்கீடு உள்ளிட்ட பொது பேருந்துகளில் இருப்பதைப் போலவே அம்சங்களுடன் 16 இருக்கைகளை இந்த பேருந்து கொண்டுள்ளது.
பேருந்தின் உடைய முன்பக்கம் பின்பக்கம் மேல் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன கேமராக்கள், உணர்கருவிகள் மூலமாக பேருந்தின் சுற்றுப்புறத்தை 360 என்ற டிகிரி கோணத்தில் கண்காணிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எந்தெந்த வழித்தடத்தில் தானியங்கி பேருந்து சோதனை நடத்தப்படுகிறது? 📌பேருந்து சேவை எண் 400: மரினா பே – ஷென்டன் வே வழித்தடத்தில் பேருந்து சேவை இயங்கும். மெரினா குரூஸ் சென்டர், கரையோர பூந்தோட்டங்கள் மற்றும் ஷென்டன் வ, டவுன்டௌன் ஆகிய MRT நிலைய நிறுத்தங்களில் இந்த பேருந்து நிற்கும்.
📌ஒன்-நார்த் பகுதியில் பேருந்து சேவை வழங்கிக் கொண்டிருக்கும் பேருந்து சேவை எண் 19, புவன விஸ்தா பேருந்து முனையத்திற்கும் ஒன்-நார்த், புவனாவிஸ்தா MRT நிலையங்களுக்கும் பேருந்து சேவை வழங்கும்.
முதல் ஆறு பேருந்துகளின் மூன்றாண்டு கால முன்னோட்ட சோதனை தொடர்ந்த மேலும் 14 பேருந்துகளை சிங்கப்பூரின் பொது போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்த LTA திட்டமிட்டு இருக்கிறது.
இந்த 6 பேருந்துகளும் அவற்றின் அமைப்புகளும் செயலி உருவாக்குனரான MKX டெக்னாலஜிஸ், மென்பொருள் தானியங்கி வாகன தயாரிப்பு நிறுவனமான ஷிடாவோ நெட்வொர்க் டெக்னாலஜி(பெய்ஜிங்) மின்சார வாகன தயாரிப்பாளரான பிஒய்டி ஆகிய முன்னணி நிறுவனங்களால் இந்த பேருந்துகள் தயாரிக்கப்பட்டிருக்கிறது.