உரிமம் பெற்ற மசாஜ் நிலையங்கள் மட்டுமே இயங்க அனுமதி..!! காவல்துறை அறிவித்த அதிரடி விதிமுறைகள்..!!
சிங்கப்பூர் காவல்துறை, மசாஜ் நிலையங்களுக்கு புதிய விதிமுறைகளை விதித்துள்ளது. இந்த ஆண்டு (2026 )இரண்டாம் பாதியில் இருந்து விதிமுறைகளை கடுமையாக்கி, அவற்றைப் பின்பற்றாத நிலையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
திறந்தவெளி மசாஜ் நிலையங்களுக்காக தற்போதைய உரிம விலக்கு ரத்த செய்யப்பட்டு, அதற்கு பதிலாக புதிய வகை 3 உரிம முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
கட்டிடத்திற்குள் தனி அறைகள் அமைப்பதற்கும் காவல்துறை தடை விதித்துள்ளது.
2018ல் விலக்கு ஆணை அமல்படுத்தப்பட்ட பிறகு, சிங்கப்பூரில் திறந்தவெளி மசாஜ் நிலையங்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து உள்ளது. இது பொதுமக்களிடையே அதிருப்தியையும் ,பாதுகாப்பு பிரச்சனைகளையும் ஏற்படுத்தி இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாகவே மசாஜ் நிலையங்களுக்கான ஒழுங்குமுறை கட்டமைப்பில் காவல்துறை முக்கிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. அவை பின்வருமாறு: 👉வகை 3 உரிமம்: திறந்தவெளி மசாஜ் நிலையங்களை நடத்தும் அனைத்து நடத்துறர்களும் உரிமத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். தங்கள் வளாகத்தை திறந்தவெளி மசாஜ் நிலையங்களாகப் பயன்படுத்துவதற்கு முன்பு, வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு வாரியம் (HDB) மற்றும் நகர்ப்புற சீரமைப்பு ஆணையம் (URA) ஆகியவற்றிலிருந்து ஒப்புதல் பெற வேண்டும்.
மசாஜ் நிலையத்திற்குள் எந்த ஒரு அறைகள், தடுப்புகள் அல்லது சிறு அறைகள் கூட இருக்கக் கூடாது.
👉அறிவிப்புகள் மற்றும் சுவரொட்டிகளைக் கட்டாயமாக ஒட்டுதல் : உரிமம் பெற்ற அனைத்து மசாஜ் நிலையங்களும் தங்கள் வளாகத்தில் ஒரு முக்கிய இடத்தில் அதிகாரப்பூர்வக் காவல்துறை சுவரொட்டிகளைக் கண்டிப்பாக ஒட்ட வேண்டும். அந்த சுவரொட்டிகளில் உரிம எண் மற்றும் விதிமுறைகளைப் புகார் அளிப்பதற்கான இணையதள முகவரி இடம்பெற வேண்டும். அறிவிப்பு சுவரொட்டி ஒட்ட தவறினால் அது ஒரு குற்றச் செயலாகக் கருதப்படும்.
👉மனிதர்களுக்கான உரிமங்களின் செல்லுபடியாகும் காலத்தை நீட்டித்தல் : நிர்வாக சுமையைக் குறைப்பதற்காக விதிமுறைகளுக்கு இணங்கும் வணிகங்களுக்கான உரிமங்களின் செல்லுபடி காலம் தற்போது உள்ள 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக நீட்டிக்கப்படும். நல்ல செயல் திறன் கொண்ட புதிய விண்ணப்பதாரர்களுக்கு முதல் ஆண்டு சோதனைக் காலத்தை நிறைவு செய்த பிறகு, 3 அல்லது 5 ஆண்டுகால உரிமம் வழங்கப்படும்
👉சீருடை ஒப்புதல் செயல்முறையை எளிதாக்குதல் : காவல்துறை ஊழியர்களின் சீருடைகளுக்கான முன் ஒப்புதல் முறையை நீக்கி அதற்கு பதிலாக தெளிவான சீருடை தரநிலைகளை கொண்டு வரும். வணிகங்கள் தங்கள் ஊழியர்களின் உடை விதிமுறைகளுக்கு இணங்க இருப்பதை உறுதி செய்ய வேண்டும் இல்லை எனில் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்
தற்போது உள்ள திறந்தவெளி மசாஜ் நிலையங்களை நடத்துபவர்களுக்கு உரிமங்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்படும். இந்த நேரத்தில் தற்போது உள்ள திறந்தவெளி மசாஜ் நிலையங்களை தொடர்ந்து இயக்கலாம் என காவல்துறை அறிவித்துள்ளது.