கடந்த சில நாட்களாக அங்கு 48 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை பதிவாகி, மக்கள் இயல்பு வாழ்க்கையே முடங்கும் நிலை உருவாகியுள்ளது. காலை 10 மணிக்குப் பிறகு சாலைகளில் யாரையும் பார்க்க முடியாத நிலை அங்கு ஏற்பட்டிருக்கிறது.
பல தொழிலாளர்கள் தங்கள் வருமானத்தின் 40 சதவீதம் வரை இழக்க நேரிட்டாலும், பகல் வேலையை தவிர்க்கத் தொடங்கியுள்ளனர்.
இதனால் நிலத்தடி நீர் குறைந்து, நதிகள் வறட்சியாகி, மண் ஈரப்பதம் குறைந்து… கோடையை மேலும் கொடுமையாக்கி இருக்கிறது.
பகலில் மட்டுமல்ல, இரவிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. காலநிலை மாற்றம் என்பது இனி எதிர்கால பிரச்சினை அல்ல, தற்போதைய நிஜம் என்பதை பண்டாவின் நிலை மீண்டும் நினைவூட்டுகிறது.