சிங்கப்பூர் ஹோட்டல்களில் அதிகரிக்கும் முன்பதிவுகள்..!! காரணம் என்ன..??
மத்திய கிழக்கில் நிலவும் சூழல் காரணமாக ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள . சிங்கப்பூரில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் விருந்தினர் இல்லங்களின் முன்பதிவுகள் அதிகரித்து வருகின்றன.
விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் ஐரோப்பிய மற்றும் அமெரிக்கப் பயணிகள் சிங்கப்பூரில் சிக்கிக் கொண்ட காரணத்தினால் அவர்கள் சிங்கப்பூரில் நீண்ட நாட்கள் தங்குவதற்கான தேவைகள் அதிகரித்து உள்ளது.
இதுகுறித்து சிங்கப்பூரின் காப்தோர்ன் ரிவர்சைட் ஹோட்டலின் பொதுச்செயலாளரான சென் யூயுன் கூறியதாவது:
மத்திய கிழக்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதன் காரணமாக மார்ச் மாதத்தில் ஹோட்டலில் முன்பதிவானது 20% அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தாார்.
மத்திய கிழக்கின் மோதலானது தொடங்கிய காலகட்டத்தில், எங்களது வாடிக்கையாளர்களில் சிலர் அவர்களது முன்பதிவுகளை ரத்து செய்ததால், அது வருவாயில் சுமார் 7% சரிவை எட்டி உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஆன்லைன் மூலமாக ஃப்ளாஷ் விற்பனை மற்றும் ஆன்லைன் சந்தைப்படுத்துதல் போன்ற காரணங்களால் முன்பதிவுகள் தற்பொழுது அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார்.
ஐரோப்பிய மற்றும் அமெரிக்கப் பயணிகள் அவர்களது பயணங்களைத் திட்டமிடுவதில் மிக எச்சரிக்கையாக இருப்பதாகவும், இதனால் முன்பதிவு செய்யும் காலமானது புறப்படுவதற்கு 1 மாதத்தில் இருந்து 1 வாரமாக குறைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொழில்துறை கருத்துக்களின் படி, ஹோட்டல் உரிமையாளர்கள் தங்களது திட்டங்களை மாற்றி அமைத்துள்ளதாகவும், இதில் வருவாய் மேலாண்மை, இருப்பை வலுப்படுத்துதல், நேரடி விற்பனை வழிகளை மேம்படுத்துதல் மற்றும் முன்பதிவு கொள்கைகளும் அடங்கும்.
உள்ளூர் ஹோட்டல்களில் தங்குமிட விகிதங்கள் சுமார் 81% முதல் 82% நீடித்து, அறையின் வாடகைகள் நிலையாக உள்ளன. இது சிங்கப்பூர் இன்னும் ஒரு பாதுகாப்பான மற்றும் நம்பகமான பயண இடமாக இருப்பதை சுட்டிக்காட்டுகிறது.
இருப்பினும் அதிகரித்து வரும் விமானக் கட்டணங்களால் தாய்லாந்தின் பாங்காக் மற்றும் இந்தோனேஷியாவின் பாலி போன்ற இடங்களில் இருந்து சிங்கப்பூர் இன்னும் விலைப்போட்டியை எதிர்கொண்டு வருகிறது.