ஏமனில் உள்ள தீவில் சிக்கிய சிங்கப்பூர் பெண்..!!

ஏமனில் உள்ள தீவில் சிக்கிய சிங்கப்பூர் பெண்..!!

ஏமனுக்கு சொந்தமான சொக்கோட்ரா என்ற தீவிற்கு வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் பலரும் சென்று இருக்கின்றனர். அதில் சிங்கப்பூரைச் சேர்ந்த பெண்ணும் அடங்குவார்.

ஜனவரி இரண்டாம் தேதி அன்று சிங்கப்பூருக்கு திரும்புவதற்காக சிங்கப்பூரைச் சேர்ந்த பெண் சென் என்பவர் விமானத்தில் ஏறுவதற்கு தயாராக இருந்தபோது விமான நிலையத்தில் இருக்கும் ராணுவ வீரர்கள் அவரை செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

விமான நிலையத்திற்குள் செல்லும் பயணிகளை ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்துவதாக அந்த பெண் கூறியுள்ளார்.

காரணம், ஏமனில் தற்போது உள்நாட்டுப் போரால் சொக்கோட்ரா அனைத்து உலக விமான நிலையத்தில் ஐக்கிய அரபு சிற்றரசுகளால் ஆதரிக்கக் கூடிய சவுத் அண்ட் ட்ரான்சிசனல் கவுன்சிலிங் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சவுதி அரேபியாவுக்கும் ஐக்கிய அரபு சிற்றரசு களுக்கும் இடையிலான நெருக்கடி நிலையானது மிகவும் மோசமடைந்து வருவதால் உள்நாட்டுப் போரும் மிகவும் தீவிரமடைந்து வருகின்றது.

இந்த காரணத்திற்காக ஏமனின் வான் வழியில் பறப்பதற்கு விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆகையால் அந்த தீவுக்கு செல்வதற்கும் அல்லது அங்கிருந்து வேறு இடங்களுக்கு செல்வதற்கும் விமானங்களுக்கு அனுமதி இல்லை என்பதை சிங்கப்பூரை சேர்ந்த சென் கூறியுள்ளார்.

இந்த தீவு உட்பட ஏமனில் உள்ள மற்ற பகுதிகளுக்கும் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள் சிலர் சமீபத்தில் பயணம் மேற்கொண்டு உள்ளதாக அபுதாபியில் இருக்கக்கூடிய சிங்கப்பூர் தூதரகமும் துபாயில் உள்ள துணை தூதரகமும் அறிவிப்பு தெரிவித்துள்ளது.

மேலும் ஏமனில் தற்போது உள்நாட்டு போர் நிலவி வரும் சூழ்நிலையில் அங்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்பதை அபுதாபியில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் சிங்கப்பூர் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK