சிங்கப்பூரின் முதல் மின் வாகன மின்னூட்ட மையம் திறப்பு.!!எங்கே..??

சிங்கப்பூரின் முதல் மின் வாகன மின்னூட்ட மையம் திறப்பு.!!எங்கே..??

சிங்கப்பூரின் முதல் HDB வாகனம் நிறுத்தும் இடங்களில் மின்சார வாகனங்களுக்கான அதிவேக மின்னூட்ட மையத்தை தெங்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

100KW வரை DC அதிவேக மின்னூட்டத் திறனுடன், இது ஒரு மின்கலத்தை 20% முதல் 80% வரை 10 நிமிடங்களுக்கும் சற்று அதிகமான நேரத்தில் மின்னூட்டம் செய்யும் திறன் கொண்டது.

 

சிங்கப்பூர் எனர்ஜி குரூப் பிளான்டேஷன் பிளாசாவுக்கு அருகில் உள்ள 123 முதல் 129 வரையிலான பிளாக்ஸ் வாகன நிறுத்தும் இடத்தில், இன்று (மே 16) அதிவேக சார்ஜிங் மையத்தை தொடங்கியுள்ளது.

இந்த மையத்தில் அதிகபட்சமாக 100 KW திறன் கொண்ட 8 DC அதிவேக சார்ஜிங் கருவிகளும் 7.4 KW திறன் கொண்ட 6 AC சார்ஜிங் கருவிகளும் வைக்கப்பட்டுள்ளன.

ஒரு சாதாரண மின்சார வாகனத்தில் 50kw DC ஃபாஸ்ட் சார்ஜிங் பயன்படுத்தப்பட்டால், அது பேட்டரியை சுமார் அரை மணி நேரத்தில் 80% வரை சார்ஜ் செய்துவிடும். 100 KW DC ஃபாஸ்ட் சார்ஜிங் பயன்படுத்தினால் இந்த திறன் இரண்டு மடங்கு அதிகமாகும்.

 

மின்சார வாகனம் பயன்படுத்துபவர்கள் தங்களது வாகனங்களை விரைவாகவும், இரவு முழுவதும் கூட இந்த மையத்தில்  சார்ஜ் செய்து கொள்ளலாம். தகுதி உள்ள பயனர்கள் ஒவ்வொரு முறை சார்ஜ் செய்யும் போதும் புள்ளிகளை சேகரிப்பார்கள். அவற்றை எதிர்கால சார்ஜிங்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

 

DC பாஸ்ட் சார்ஜிங் இருக்கு 1 கிலோ வாட் மணிக்கு $0.80, சோ சார்ஜிங்கிற்கு 1 கிலோ வாட் மணிக்கு$ 0.69 வசூலிக்கப்படுகிறது.

 

சிங்கப்பூர் எனர்ஜி நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதத்தில் தெங்காவில் தனது முதல் மின்சார வாகன மின்னூட்ட நிலையத்தை நிறுவியது. மேலும் புதிய தெங்கா வாகனம் நிறுத்தும் இடத்தில் கூடுதல் DC அதிவேக மின்னூட்ட நிலையங்களை நிறுவுவது உட்பட அந்த நிலையத்தை  விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK