Sg+ MY News 007 என்ற முகநூல் பக்கத்தில் இச்சம்பவம் குறித்த காணொளியானது பதிவேற்றப்பட்டுள்ளது. அந்த காணொளியல் யோ சூ காங் பகுதியில் உள்ள நடுப்பகுதியில் ஒரு மஞ்சள் நிற டாக்சி ஒரு பெரிய மரத்தில் மோதியது தெரிகிறது.
வாகனம் மரத்தில் மோதியதில் அதன் முன் பகுதி கடுமையாக சேதம் அடைந்தது. மேலும் அந்த வாகனத்தில் இருந்து அடர்த்தியான புகை வெளியேறிதால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்டது.
இந்த விபத்து குறித்து சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினருக்கு (SCDF) மே 30 பிற்பகல் 3:50 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வீரர்கள் வர வாகனம் தீப்பிடித்து எரிவதைக் கண்டு நீர்த்தார பீரங்கிகளைப் பயன்படுத்தி தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் டாக்சி ஓட்டுநர் மற்றும் ஒரு பெண் பயணி காயமடைந்துள்ளனர். அவர்களை சிகிச்சைக்காக டான் டாக் செங் மருத்துவமனைக்கு SCDF வீரர்கள் கொண்டு சென்றனர்.
அப்பர் தாம்சன் சாலையை நோக்கிய யோ சூ காங் சாலையின் பகுதியில் ஒரு டாக்சி மற்றும் ஒரு கார் சம்பந்தப்பட்ட விபத்து நிகழ்ந்துள்ளதாக காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. விபத்தில் காயமடைந்த 68 வயதான டாக்சி ஓட்டுநர் அவருடன் பயணித்த 58 வயதான பெண் பயணியும் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் குறித்து விசாரணையை காவல்துறை தொடர்ந்து நடத்தி வருகிறது.