SBL இல் சர்ச்சையை ஏற்படுத்திய விவகாரம்..!!! காரணம் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்
சிங்கப்பூர்:சிங்கப்பூர் கூடைப்பந்து லீக் (SBL) மேட்ச் பிக்சிங் சர்ச்சையில் சிக்கிய வீரர்கள், விசாரணை முடியும் வரை எந்தவொரு அதிகாரப்பூர்வ கூடைப்பந்து நடவடிக்கைகளிலும் பங்கேற்க தடைசெய்யப்பட்டுள்ளனர்.
CNA-வின் கேள்விக்கு பதிலளித்த சிங்கப்பூர் விளையாட்டு கவுன்சில், இந்த விசாரணைக்கு உதவ சிங்கப்பூர் கூடைப்பந்து சங்கத்துடன் (SBA) நெருக்கமாக இணைந்து செயல்படுவதாக தெரிவித்தது.
மேலும் “மேட்ச் பிக்சிங் என்பது விளையாட்டின் நேர்மையை பாதிக்கும் மிகப்பெரிய குற்றமாகும். நியாயமான போட்டியின் அடிப்படை மதிப்பை மீறுவதை SB பொறுத்துக்கொள்ளாது. இதுபோன்ற சம்பவங்களை மிகுந்த தீவிரத்துடன் எடுத்துக்கொள்கிறோம்,” என SBA வலியுறுத்தியது.
ஊழல் நடைமுறைகள் புலனாய்வுப் பிரிவு (CPIB) வெளியிட்ட அறிக்கையின் படி, இந்த சீசன் லீக்கில் கையாடல் செய்ததாக சந்தேகிக்கப்படும் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள் அனைவரும் 19 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள்.இவர்களில் எட்டு பேர் உள்ளூர் குடிமக்கள் என்றும் ஒருவர் நிரந்தர குடியிருப்பாளர்கள் என்றும் கூறப்படுகிறது.