உலகிற்கே 13 ஆண்டுகள் இலவசமாக கிடைத்த எரிவாயு..!! இனி கிடைக்குமா..??

உலகிற்கே 13 ஆண்டுகள் இலவசமாக கிடைத்த எரிவாயு..!! இனி கிடைக்குமா..??

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதட்டமான சூழலில் தற்போது ஒட்டுமொத்தமாக உலகின் எரிசக்தி வரைபடத்தையே தலைகீழாக மாற்றக்கூடிய அளவிற்கு  அதிர்ச்சியூட்டும் செய்தி வெளியாகி உள்ளது.

மொத்த உலகிற்கே 13 ஆண்டுகளுக்கும் மேலாக இலவசமாக இயற்கை எரிவாயுவை வழங்கி வந்த பிரம்மாண்ட வளத்தை கொண்ட ஈரானின் சவுத் பார்ஸ் எரிவாயு வயலை குறி வைத்து பாரிய தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

இந்த எரிவாயு வயல் என்பது இயற்கையின் ஒரு அதிசயம் என்றே கூறலாம். பாரசீக வளைகுடாவின் ஆழ்கடலில் அமைந்துள்ள இது ஈரான் மற்றும் கத்தார் நாடுகளுக்கு இடையேயான ஒரு கூட்டு எரிவாயு வயலாக அமைந்திருக்கிறது.

இதனுடைய மொத்த பரப்பளவு 9700 சதுர கிலோமீட்டர் ஆகும். இதில் ஈரானின் பங்கு 3700 சதுர கிலோமீட்டர் ஆகும் மீதமுள்ள பகுதி அனைத்தும் கத்தார் உடைய பங்காக கணக்கிடப்பட்டுள்ளது.

இதில் சுமார் 51 ட்ரில்லியன் கனை மீட்டர் இயற்கை எரிவாயுவும், 50 பில்லியன் பீப்பாய்கள் எரிவாயு திரவமும் உள்ளதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.

உலகின் வருடாந்திர நுகர்வுடன் ஒப்பிடும்போது இந்த ஒரு வயலின் மூலம் மட்டுமே உலகிற்கு 13 ஆண்டுகளுக்கு தேவையான எரிசக்தியை வழங்க போதுமான அளவு உள்ளடக்கம் இருக்கிறது.

இந்த தாக்குதல் மூலமாக உலக எரிசக்தி சங்கிலியின் முதுகெலும்பை இலக்கு வைத்து தாக்கியது குறிப்பிடத்தக்கது. கடலில் அமைந்துள்ள அகழ்வாராய்ச்சி தளங்கள் மற்றும் கடற்கரை ஓரங்களில் உள்ள பிரதான சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நவீன டோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது இதனால் பல குழாய் கட்டமைப்புகள் தீ பற்றி எரிந்து பழுதடைந்து விட்டது.

இந்த தாக்குதலின் விளைவாக மிக விரைவில் உலகம் முழுவதும் இதன் எதிரொலி ஆரம்பிக்க வாய்ப்பு உள்ளது. அடுத்த சில மணி நேரங்களிலேயே இயற்கை எரிவாயுவின் விலையானது 40 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து இரக்கிறது இது ஐரோப்பா மற்றும் ஆசியாவின் தொழிற்சாலைகளை முடக்கும் அளவிற்கு அபாயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இலங்கையின் எரிவாயு விலை உலகச் சந்தை விலையிலேயே தீர்மானிக்கப்படுகிறது இதனால் வரும் வாரங்களில் இலங்கையில் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வை ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.

வெப்ப மின் உற்பத்தி நிலையங்களுக்கான எரிபொருள் விலை தற்போது அதிகரிப்பின் காரணமாக உலகம் முழுவதும் மின்வெட்டு ஏற்படும் சூழலும் உருவாகலாம்.

இதன் மூலமாக சவுத் பார்ஸ் எரியும் நெருப்பு பாரசீக வளைகுடாவில் தெரிந்தாலும் இதனுடைய வெப்பம் நாளை உங்கள் சமையலறைக்கும் மின்சார கட்டணத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK