சோவா சூ காங்க் பகுதியில் நடந்த துயரச் சம்பவம்..!!

சோவா சூ காங்க் பகுதியில் நடந்த துயரச் சம்பவம்..!!

சிங்கப்பூர்: சோவா சூ காங்க் பகுதியில் அமைந்துள்ள வாகன நிறுத்துமிடத்தில், ஒரு பூனை மரணமடைந்தது. அந்த பூனை, கார் மோதி இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.அதன் உடலருகே இரத்தம் படிந்து காணப்படுகிறது.

இந்த துயர சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (02.11.25) சோவா சூ காங் மிடில் ரோடு, பிளாக் 214 அருகே நடந்தது.

இது குறித்து நெட்டிசன் ஒருவர் “சிங்கப்பூர் சமூக பூனைகள்” என்ற முகநூல் குழுவில் பதிவிட்டார்.

அன்று வாகன நிறுத்துமிடத்தை கடந்து சென்ற அந்த நெட்டிசன், “பூனையை பார்த்ததாகவும், தனக்கு அவசரமாக வேறு வேலை இருந்ததால் செல்ல வேண்டி இருந்ததாக குறிப்பிட்டார். ஆனால் அவர் திரும்பி வந்தபோது, உடல் அகற்றப்பட்டிருந்தது” என தெரிவித்துள்ளார்.

அவர் பகிர்ந்த புகைப்படங்களில், பூனை இரத்த வெள்ளத்தில் கிடப்பதையும், கண்கள் வீங்கிய நிலையில், வாயிலிருந்து ரத்தம் வருவதையும் காணலாம். இந்த காட்சி பலரையும் துயரத்தில் ஆழ்த்தியது.

பூனைக்கு முந்தைய நாள் (01.11.25) இரவு உணவளித்ததாக அந்த நெட்டிசனின் குடும்பத்தினர் கூறினர். “அது எங்கள் அனைவருக்கும் பழக்கமான பூனை. இப்படி இறந்து போயிருப்பது நம்ப முடியவில்லை,” என அவர்கள் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் பல சமூக வலைதள பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பலர் தங்கள் வருத்தத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்தி, “சமூக பூனைகள் பாதுகாப்பாக வாழ ஒரு அமைப்பான சூழலை உருவாக்க வேண்டும்” என வலியுறுத்தி
பதிவிட்டிருந்தனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK