நாளை முதல் வழக்கம்போல் ரயில் சேவை தொடக்கம்..!! எதற்கிடையில்..??

நாளை முதல் வழக்கம்போல் ரயில் சேவை தொடக்கம்..!! எதற்கிடையில்..??

சிங்கப்பூரில் நாளை(மார்ச் 17) முதல் தானா மேராவுக்கும் எக்ஸ்போ நிலையத்திற்கும் இடையிலான ரயில் சேவை மறுபடியும் செயல்பட தொடங்க உள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியுள்ளது.

இதற்கு முன்னதாக மார்ச் 14ஆம் தேதியிலிருந்து நான்கு நாட்களுக்கு மேம்பாட்டு பணி மேற்கொள்ள இருப்பதால் ரயில் சேவைகள் நிறுத்தப்பட உள்ளதாக ஆணையம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது ஒரு நாள் முன்னதாகவே வேலைப்பாடுகள் நிறைவடைந்து விட்டது என்பதை பேஸ்புக்கில் LTA பதிவிட்டுள்ளது.

மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளும் போது வானிலையும், பராமரிப்பு குழுக்களும் சிறப்பாக ஒத்துழைப்புடன் செயல்பட்ட காரணத்தினால் இது சாத்தியமானது என்பதை LTA தெரிவித்துள்ளது.

ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்த நேரங்களில் தற்காலிக பேருந்து சேவைகள் வழங்கப்பட்டன. அதில் ஐந்து முதல் எட்டு நிமிட இடைவெளிகளில் பேருந்துகள் சேவையாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

சேவை நிறுத்தப்பட்ட முதல் வார நாளான இன்று (மார்ச் 16) பயணிகளுக்கு எந்த சிரமமும் ஏற்படவில்லை என்பதையும் நிலப் போக்குவரத்து ஆணையும் சுட்டிக்காட்டி உள்ளது

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK