சிங்கப்பூரில் மொழிபெயர்ப்பு போட்டி..!!!

சிங்கப்பூரில் மொழிபெயர்ப்பு போட்டி..!!!

சிங்கப்பூரில் தமிழ் பட்டிமன்ற கலைக்கழகம் நடக்கும் தேசிய தின மொழிபெயர்ப்பு போட்டி மற்றும் மலர் வெளியீடு (ஆகஸ்ட் மாதம்) 17ஆம் தேதி தேசிய நூலகத்தில் நடைபெற இருக்கின்றது.

அமைச்சர்கள், தலைவர்களின் வாழ்த்து செய்திகள், கட்டுரை, கவிதை, சிறுகதைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய இலக்கிய மலராக SG60 சிறப்பு மலர் வெளியிடப்படுகிறது.

அதே நாளில் தமிழ் பட்டிமன்ற கலைக்கழகத்தின் 125 நிகழ்வுகளின் நிறைவு மலர் பாசிபிலிட்டி அறையில் காலை 10:30 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.

மேலும் இதற்கு முன் 25,50,100 நிகழ்வுகளை நிறைவு மலர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பிற்பகலில் மொழிபெயர்ப்பு போட்டிகள் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 500 மாணவர்கள் பங்குபெறும் அந்த போட்டிகள் தேசிய நூலகத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டியானது இரண்டு சுற்றுகளாக நடைபெறும். இந்த போட்டியில் தொடக்கநிலை ஒன்றிலிருந்து ஆறாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பங்கு பெறலாம்.

மாலை 5:30மணி அளவில் போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் பரிசுகள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மலர் வெளியீடு மாணவர்களுக்கான போட்டி அரிய நிகழ்ச்சிகளில் முன்னால் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் திரு இரா. தினகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

கூடுதல் தகவல்களுக்கு திருமதி நபிலா நஸ்ரின் (90268601) அல்லது முனைவர் ராஜி ஸ்ரீனிவாசன் (90012290) ஆகியவை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan