துவாஸ் துறைமுகம் நியூ அப்டேட்..!!

துவாஸ் துறைமுகம் நியூ அப்டேட்..!!

சிங்கப்பூர் கடல் சார் மற்றும் துறைமுக ஆணையம் தனது முகநூல் பக்கத்தில் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பதிவில் நிலத்தின் பிஎஸ்சி குழுமம் பராமரிப்பு தளம் மற்றும் முனைய உள் கட்டமைப்பு கட்டுமான திட்டங்களை மேற்கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூரில் துவாஸ் துறைமுகம் கட்டுவதற்காக நில மீட்பு திட்டம் தற்போது தொடங்கப்பட்டு இரண்டாம் கட்டடத்திற்கான முதல் கட்ட நிலமானது தற்போது மீட்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் கடல் மற்றும் துறைமுக ஆணையம் நில ஆணையத்தின் ஒப்புதல் உடன் துவாஸ் துறைமுகம் B7 முதல் B8 வரையிலான பகுதியில் முடிவடைந்த நில மீட்பு திட்டத்திற்கான நிலத்தை கடந்த மாதம் (மார்ச்) துறைமுக குழுமத்திடம் ஒப்படைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துவாஸ் துறைமுகத்தில் நில மீட்பு பணியின் உடைய முதல் கட்டம் 2021 இல் நிறைவடைந்தது. 2022 ஆம் ஆண்டு அதன் செயல்பாடுகள் தொடங்கப்பட்டு தற்போது 12 செயல்பாட்டு தளங்களாக விரிவடைந்த தகவலை அதிகாரிகள் பதிவிட்டுள்ளனர்.

இந்த முதல் கட்டமானது 2027 ஆம் ஆண்டிற்குள் 18 தலங்களாக அதிகரிக்கப்படும் எனவும் இதன் ஆண்டு கையாளும் திறன் 20 மில்லியன் TEU வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கட்டுமான திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை பொருத்தவரை அதிகாரிகள் நில மீட்பு பணிகளை படிப்படியாக முடித்து வருகின்றனர். இந்த முறை B7 மற்றும் B8 கப்பல் நிறுத்தும் இடங்களை ஒப்படைப்பது கட்டம் கட்டமாக நடத்தி முடிக்கப்படும் இந்த மேம்பாட்டு பணியின் முதல் மைல்கல்லாகும்.

துவாஸ் துறைமுகமானது 20040 ஆம் ஆண்டில் முழுமையாக கட்டி முடிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அது ஆண்டுக்கு 65 மில்லியன் TEU- க்களை கையாளும் திறன் பெற்றிருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK