இது குறித்த புகைப்படங்கள் சிங்கப்பூரா சேனல் என்ற சமூக ஊடகப் பக்கம் முகநூல் பதிவில் வெளியிட்டிருந்தது. இதில் சம்பளம் நடந்த நேரத்தில் போதே ஒரு பெரிய வெடிச்சட்டம் கேட்டதாகவும் அதனை தொடர்ந்து சம்பவ இடத்தில் தீ பிழம்புகள் எரிய ஆரம்பித்ததாகவும் கூறப்பட்டிருந்தது.
உடனடியாக சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படை தகவல் கிடைத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். மேலும் தீப்பிடித்தது ஒரு ட்ரெய்லர் லாரி என தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.
இந்த விபத்திற்கான காரணம் தற்போது விசாரணையில் உள்ளது.