கல்லாங் குளோசில் இருக்கும் குடியிருப்பு இடத்தை ஏலம் எடுத்தவர் யார்..??

கல்லாங் குளோசில் இருக்கும் குடியிருப்பு இடத்தை ஏலம் எடுத்தவர் யார்..??

கல்லாங் குளோசில் உள்ள ஒரு குடியிருப்பு இடமானது ஏலத்திற்கு வந்ததை அடுத்த இது குறித்த அறிக்கை இன்று (ஏப்ரல் 10) வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த இடத்திற்கான டெண்டர் டிசம்பர் 8, 2025 அன்று தொடங்கப்பட்ட ஏப்ரல் 7, 2026 அன்று முடிவடைந்து இருக்கிறது.

இந்த இடத்தை ஏலத்திற்கு எடுத்தவர் அதிகபட்ச ஏலத்தொகை குறிப்பிட்டு இருந்த பிரேசர்ஸ் ப்ராப்பர்டி பீனிக்ஸ் மற்றும் எம்ஜிஆர் இன்வெஸ்ட்மென்ட் ஆகியவைகளை உள்ளடக்கிய ஒரு கூட்டமைப்பு ஆகும்.

இது குறித்த அறிவிப்பை நகர்ப்புற மறு வளர்ச்சி ஆணையம்(URA) தெரிவித்திருக்கிறது.

பிரேசர்ஸ் பிராப்பர்டி பீனிக்ஸ் என்பது பிரேசர்ஸ் ப்ராப்பர்ட்டியின் துணை நிறுவனமாகும். அதோட எம் ஜி ஆர் இன்வெஸ்ட்மென்ட் என்பது மிட்சுபிஷி எஸ்டேட்டின் துணை நிறுவனமாகும்.

இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் வெற்றி பெற்ற ஏலத்தொகை மதிப்பானது $610.75 மில்லியன் என்றும், குடியிருப்பு இடத்தின் மொத்த தரை பரப்பின் உடைய ஒரு சதுர மீட்டருக்கு தோராயமாக $15,231 என்பதற்கு சமம் என நகர்ப்புற மறு வளர்ச்சி ஆணையம் கூறியுள்ளது.

இந்த இடம் 99 வருட குத்தகை உரிமையை கொண்டிருக்கிறது. தோராயமாக 11,456 சதுர மீட்டர் பரப்பளவை கொண்டிருக்கிறது. குடியிருப்பு மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டிருக்கிற அதிகபட்ச மொத்த மொத்த தரை பரப்பு அளவானது 40,098 சதுர மீட்டர் ஆகும்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK