சிங்கப்பூரில் வித்தியாசமான முறையில் கடன் கேட்ட இளைஞர் கைது..!!
சிங்கப்பூர்: சோவா சூ காங், கீட் ஹாங் குளோசில் இருக்கும் ஒரு குடியிருப்பு பகுதியில் வித்தியாசமான முறையில் ஒரு இளைஞர் கடன் கேட்டிருக்கிறார்.
இது குறித்த விரிவான தகவலை தற்போது பார்க்கலாம்.
சோவா சூ காங் குடியிருப்பு பகுதியில் ஒரு இளைஞர் கடன் வாங்கியவர்களிடம் திரும்ப செலுத்துமாறு குடியிருப்பு பகுதியின் உடைய வெளிப்புற சுவரில் ஒரு வாசகம் ஒன்று எழுதி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சுவரில் எழுதிய வாசகம்: “நீங்கள் $$ கடன் பட்டிருக்கிறீர்கள், அதை திரும்ப செலுத்தவில்லை என்றால் அடுத்த முறையில் உங்கள் வீட்டில் வர்ணம் பூசப்படும்” என எச்சரிக்கை வாசகத்தை எழுதியுள்ளார்.
இது குறித்த காவல்துறை நேற்று (ஏப்ரல் 1 ஆம் தேதி) ஓர் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது.
மேற்கூறிய வித்தியாசமான கடன் வசூல் நடவடிக்கை குறித்து ஜூரோங் காவல் நிலையம், கிளமெண்டி காவல் நிலையம் மற்றும் காவல் செயல்பாட்டு கட்டுப்பாட்டு மையத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகளுக்கு புகார் கிடைத்ததை அடுத்த சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு அங்குள்ள சிசிடிவி காட்சிகள் மூலமாக 5 மணி நேரத்திற்குள் சந்தேகப்பட்ட நபரை அடையாளம் கண்டு உடனடியாக கைது செய்தனர்.
அவ்வாசகத்தை எழுதியிருக்க 23 வயது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் முதற்கட்ட விசாரணையின் போது, சிங்கப்பூர் முழுவதும் இது போன்ற பல கடன் வசூல் தொல்லை வழக்குகள் அதிகரித்து வருவதாக சந்தேகிக்கப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் மீது இன்று (ஏப்ரல் 2) பனகடன் வழங்குவோர் சட்டம் 2008 இன் கீழ் குற்றம் சாட்டப்பட உள்ளது. முதல் முறை குற்றம் செய்பவர்களாக இருந்தால், அவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், $5000 முதல் $50,000 வரை அபராதம் மற்றும் ஆறு பிரம்படிகள் வரை விதிக்கப்படும்.
கடன் வசூல் செய்யும் கந்து வட்டிக்காரர்களின் இது போன்ற தொல்லை தரும் நடவடிக்கைகளை சிறிதும் சகித்துக் கொள்ள முடியாது எனவும் பொது சொத்துக்களை வேண்டுமென்றே சேதப்படுத்துபவர்கள் அல்லது பொது பாதுகாப்பு மற்றும் ஒழுங்கை சீர்குலைப்பவர்கள் மீது கண்டிப்பாக சட்டப்படி கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.