பூன் லே பேருந்து சந்திப்பில் பயங்கர விபத்து..!!

பூன் லே பேருந்து சந்திப்பில் பயங்கர விபத்து..!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் பூன் லே பேருந்து சந்திப்புக்கு வெளியே இன்று(06.01.26)காலை ஒரு பேருந்தும் பிக்கப் லாரியும் மோதிக்கொண்ட விபத்து சம்பவம் இடம்பெற்றது.

இந்த விபத்தில் 49 வயதுடைய பிக்கப் லாரி ஓட்டுநர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அவர் சுயநினைவுடன் இருப்பதாகவும், காவல்துறையின் விசாரணைக்கு உதவி வருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Xiaohongshu தளத்தில் Cargo என்ற பயனர் பதிவேற்றிய புகைப்படங்களில், கருப்பு நிற Honda பிக்கப் லாரி சாலையோரப் பாதையில் கவிழ்ந்த நிலையில் காணப்படுகிறது.

அதே நேரத்தில், சந்திப்பின் நடுவில் ஒரு புதிய MRT பேருந்து நிறுத்தப்பட்டிருப்பதும் புகைப்படங்களில் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து 8world.com எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த காவல்துறை, இன்று(06.01.26) காலை 7.40 மணியளவில் ஜூரோங் வெஸ்ட் சென்ட்ரல் 3 சாலையில், ஜூரோங் வெஸ்ட் ஸ்ட்ரீட் 64 நோக்கிச் சென்ற ஒரு சிறிய வேன் மீது பேருந்து மோதியதாக தகவல் கிடைத்ததாக தெரிவித்தது.

மேலும் இந்த விபத்து தொடர்பான மேலதிக விவரங்களை உறுதிப்படுத்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK