சிங்கப்பூர் அரசின் நிர்வாக மேம்பாடுகள்..!! மேலோங்கிய பங்குச் சந்தைகள்..!!
சிங்கப்பூர் : பங்குச் சந்தைகளில் அரசாங்கம் மேற்கொண்ட மேம்பாடுகள் காரணமாக பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகள் இந்த ஆண்டின் (2026) முதல் காலாண்டு சிறந்த முறையில் வர்த்தகமாகியுள்ளன.
இருப்பினும், மத்திய கிழக்கு சூழல் காரணமாக தற்பொழுது பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கங்கள் அதிகரித்து காணப்படுகிறது.
2026 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை 3 மாதங்களில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறியீடு (எஸ்டிஐ) 5.1% அளவில் ஏற்றம் கண்டு 4885.45 புள்ளிகளை எட்டியது. இதனுடன் ஈவுத்தொகைகளை சேர்த்து கணக்கிடும் பொழுது மொத்த வருவாய் 5.6% என்ற மதிப்பில் உயர்ந்துள்ளதாக சிங்கப்பூர் பங்குச் சந்தை தரவுகள் காட்டுகின்றன.
இதர பங்குச் சந்தைகளுடன் ஒப்பிடும்பொழுது எஸ்டி குறியீட்டின் செயல்பாட்டானது மிக வலுவாக காணப்படுகிறது.
மார்ச் மாத வட்டாரக் குறிகளைக் காட்டிலும் சிறப்பாக செயல்பட்டதால் தொடர்ச்சியான நிதியும், எஸ்டி குறியீட்டின் பாதுகாப்பான முதலீட்டுத் தகுதியை வலுப்படுத்தியுள்ளது.சிங்கப்பூரின் பங்குச்சந்தைகளுக்கு மீள்திறனுடனான வளர்ச்சி வேகமும் அதனை வலுப்படுத்த கைகொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 30 பெருநிறுவனங்களின் பங்குகள் 5% அளவில் உயர்ந்து உள்ளன.
இந்த ஆண்டின் (2026) முதலாம் காலாண்டில் சிறப்பான வர்த்தகம் கொண்ட 10 பங்குகளின் பட்டியலில் எஸ்டி என்ஜினியரிங், வில்மார், எஸ்ஜிஎக்ஸ் , ஹாங்காங்லேண்ட், கெப்பல், ஓசிபிசி வங்கி மற்றும் செம்கார்ப் ஆகிய நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.$10 மில்லியனுக்கு மேல் சந்தை மூலதனத்தை கொண்ட நிறுவனங்களாக இவை பட்டியலிடப்பட்டிருக்கின்றன.
தற்போது நிலவிவரும் சூழலிலும் சில சிங்கப்பூர் நிறுவனங்கள் அரசாங்க சீர்திருத்தங்களால் பலனடைந்து உள்ளன.