சிங்கப்பூரில் சட்டவிரோதப் பொருட்கள் கடத்தல்..!! மலேசியருக்கு சிறைத் தண்டனை..!!

சிங்கப்பூரில் சட்டவிரோதப் பொருட்கள் கடத்தல்..!! மலேசியருக்கு சிறைத் தண்டனை..!!

சிங்கப்பூரில் மின் சிகரெட் சாதனங்கள் போன்ற சட்டவிரோதப் பொருட்களைக் கடத்திய குற்றத்திற்காக மலேசியர் ஒருவருக்கு சிறைத் தண்டனை
விதிக்கப்பட்டுள்ளது.

மின் சிகரெட் சாதனங்கள் உட்பட 37,000 பொருள்களை சிங்கப்பூருக்குள் கொண்டு வந்த குற்றத்தின் பெயரில் ஜெகதீஸ்வரன் நாகலிங்கம் என்ற 28 வயதுடைய மலேசியருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

அவர் கடத்தி வந்த சட்டவிரோதப் பொருட்களின் மொத்த மதிப்பானது கிட்டத்தட்ட $277,000 என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட நபர், 14,700 மின்சிகரெட்டுகள் போன்ற சட்டவிரோதப் பொருட்களை சிங்கப்பூருக்குள் கொண்டு வந்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும் அவர் பெயரில் புகையிலை சூடேற்றும் கருவிகள் வைத்திருப்பது உட்பட 2 இதர குற்றச்சாட்டுகளும் சாட்டப்பட்டுள்ளது.

மலேசியாவின் தளவாட நிறுவனம் ஒன்றில் ஓட்டுநராக பணிபுரியும் அந்த நபர், பணத் தேவை இருந்த காரணத்தினால் நிறுவனத்தின் அதிகாரியிடம் கடன் கேட்டுள்ளார்.

” டேவிட் ” என்னும் பெயர் கொண்ட அந்த நிறுவன அதிகாரி சிங்கப்பூருக்கு சில சட்ட விரோதப் பொருட்களைக் கொண்டு சென்றால் பணம் தருவதாக அந்த நபரிடம் கூறியுள்ளார். அந்த நபரிடம் அந்த அதிகாரி அந்த பொருட்கள் பற்றிய விவரங்கள் எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்த ஆண்டு (2026) பிப்ரவரி 2- ஆம் தேதி அன்று அதிகாலை 5.30 மணி அளவில் ஜெகதீஸ்வரன் லாரி ஒன்றை துவாஸ் சோதனைச்சாவடியை நோக்கி ஓட்டி வந்தபோது, சந்தேகத்தின் பேரில் அந்த லாரியை சோதனைச் சாவடியில் உள்ள அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.

அப்பொழுது அந்த லாரியில் சட்டவிரோதப் பொருட்கள் இருப்பதைக் கண்டு, ஜெகதீஸ்வரனை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கானது நேற்று (ஏப்ரல் 16) நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. சட்டவிரோதப் பொருட்களைக் கடத்தியக் குற்றத்திற்காக ஜெகதீஸ்வரனுக்கு, 22 வார சிறைத் தண்டனையை நீதிமன்றம் வழங்கியுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK