நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (NTU) தீ விபத்து..!! மாணவர்களின் நிலை என்ன..!!
சிங்கப்பூர் : உலக அளவில் புகழ்பெற்ற முன்னணி ஆராய்ச்சிப் பல்கலைக்கழகமான நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (NTU) தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
நான்யாங் பல்கலைக்கழகத்தின் கணித மற்றும் இயற்பியல் அறிவியல் பள்ளி அமைந்துள்ள நான்யாங் லியான் சாலை 21 என்ற முகவரியில், நேற்று (ஏப்ரல் 17 ) பிற்பகல் 1:50 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
நான்காவது மாடியில் உள்ள ஆராய்ச்சி கூட ஆய்வகத்தில் புகைப் போக்கிக்குள் இருந்த பொருள்களில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து குறித்த தகவல் குடிமைப் பாதுகாப்புப் படையினருக்கு (SCDF) தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குடிமைப் பாதுகாப்புப் படையினரும், தீயணைத்து வீரர்களும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தீ விபத்து ஏற்பட்ட பிறகு, ஏராளமான மக்கள் கல்வி கட்டிடத்திற்கு வெளியே காத்திருப்பதும் அவர்கள் வெளியேற்றப்படும் புகைப்படங்களாக இணையத்தில் பரவி வருகின்றன.
ஆய்வகத்தில் ஒரு மாணவர் தனது வேதியியல் சோதனையை ஏறக்குறைய முடிக்கும் நிலையில் இருந்த போது தீ எச்சரிக்கை ஒலித்துள்ளது. அதனால் அங்கு உள்ளவர்களை வெளியேறும்படி அந்த மாணவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தீ விபத்திற்கு பிறகு பிற்பகல் 2.50 மணியளவில், தீ விபத்து குறித்த காவல்துறையினரும் கொடுமை பாதுகாப்பு படை நகம் விசாரிக்க வேண்டி இருப்பதாால், மாணவர்கள் கற்பிக்கும் கட்டிடத்திற்கு செல்ல முடியாமல் இருந்துள்ளனர்.
தீ விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.