சிங்கப்பூர் : மலேசியாவில் பதிவு செய்யப்பட்டுள்ள வாகனம் ஒன்றில் ஒருவர், உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வழியாக வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளைக் கடத்துவதற்கு முயற்சி செய்துள்ளார்.
அப்போது குடி வரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையத்தால் (ICA) அது கண்டறிப்பட்டு, வாகன ஓட்டுநரான 35 வயது மலேசியரை கைது செய்துள்ளது.
நேற்று (மே 5) ICA தனது முகநூல் பக்கத்தில் ஒரு காணொளியைப் பதிவிட்டுள்ளது. கடந்த மாதம் (ஏப்ரல்) 15 ஆம் தேதி அன்று ICA வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சோதனையில் இந்த சிகரெட் கடத்தல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
35 வயதான மலேசியா ஒருவர் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வழியாக வந்த வாகனத்தை சோதனை இட்டபோது சிகரெட்டுகள் வாகனத்தின் மறைவான இடங்களில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்துள்ளது.
270 அட்டை பெட்டிகள் மற்றும் சில பாக்கெட்டுகள் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் போன்ற பொருட்களை ICA பறிமுதல் செய்துள்ளது. சந்தேக நபர் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை மேலதிக விசாரணைக்காக சிங்கப்பூர் சுங்கத் துறைக்கு (Singapore Customs) மாற்றப்பட்டுள்ளது.
வரி செலுத்தப்படாத பொருட்களைக் கடத்தியது, கையாள்வது அல்லது வைத்திருப்பது ஆகியவை சிங்கப்பூர் சுங்கச் சட்டத்தின் கீழ் மிகவும் கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது.
கைது செய்யப்பட்ட மலேசியர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை வழங்க அதிக வாய்ப்புள்ளது.
3400 க்கும் மேற்பட்ட அல்லது 2,670 -க்கு அதிகமான பாக்கெட்டுகளும், 270 முதல் 300க்கும் அதிகமான கடத்தல் சம்பவங்கள் இந்த ஆண்டின் (2006) தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.