சிங்கப்பூரில் அதிகரித்து வரும் சிம்கார்டு மோசடிகள்..!! 4 பேர் கைது..!!
சிங்கப்பூரில் குற்றவியல் நடவடிக்கைகளுக்காக சிம் அட்டைகள் பயன்படுத்தியதன் பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டு, ஜூன் 6-ம் தேதி நீதிமன்றத்தில் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்களின் வயது 26 முதல் 38 வயதிற்குள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
துவாஸில் வியாழக்கிழமை (ஜூன் 4) அதிகாரிகள் மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கையின் போது, 2 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் ஆகியோரை காவல்துறை கைது செய்தது என்று ஜூன் 5ஆம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தது.
மோசடியாக பின்செலுத்துகை(PostPaid) சிம் அட்டைகளுக்குப் பதிவு செய்யும் சில்லறை விற்பனையாளர்களைக் குறி வைத்து நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டனர். அந்த சிம் அட்டைகளைப் பின்னர் வெளிநாடுகளில் உள்ள குற்ற கும்பல்கள் பயன்படுத்துவதாக கிடைத்த தகவலின் பெயரில் இந்த நடவடிக்கைஎடுக்கப்பட்டது.
கூடுதல் பின்செலுத்துகை சிம் அட்டைகளைப் பெறுவதற்கு வாடிக்கையாளர்களின் தகவல்களைப் பயன்படுத்திதாங்க 34 வயது ஆடவர் மீதும் பெண்கள் இருவர் மீதும் காவல்துறை சந்தேகித்தது.
அவ்வாறு பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்கள் ஆள் மாறாட்ட மோசடிகளுக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களில் ஒரு ஆளான 26 வயது இளைஞருக்கு இது போன்ற மோசடிகளை எவ்வாறு செய்வது என்பதை மோசடிக்காரர்கள் கற்றுக் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.
கைது செய்யப்பட்ட நபர்களில் 30 முதல் 65 வயதுக்குட்பட்டவர்களிடன் காவல்துறை விசாரணையை மேற்கொண்டு வருகிறது.
கைது செய்யப்பட்டவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு $10,00 அபராதமும் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.