சிங்கப்பூரில் நிலச்சரிவால் நிறுத்தப்பட்ட கட்டுமானப் பணிகள்..!! எப்போது தொடங்கும்..??

சிங்கப்பூரில் நிலச்சரிவால் நிறுத்தப்பட்ட கட்டுமானப் பணிகள்..!! எப்போது தொடங்கும்..??

சிங்கப்பூரில் கடந்த மே மாதம் ஜாலான் தஞ்சோங் கா சின் சாலையில் கழிவுநீர்க் குழாய் பணிகளால் ஏற்பட்ட பள்ளத்தால் தற்காலிகமாக கட்டுமானப் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. அந்தப் பணிகள் மீண்டும் இதுவரை தொடங்கப்படவில்லை.

இந்த கட்டுமான பணிகள் மீண்டும் அடுத்த ஆண்டு தொடங்குவதற்கு பொது பயன்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளதாக தஞ்சோங் பகுதியின் கவுன்சிலர் என்ஜி பெய் மிங் தெரிவித்துள்ளார்.

உள்துறை, சமூக மற்றும் குடும்ப மேம்பாட்டுத் துறை இணை அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமானவர் தனது முகநூல் பக்கத்தில் நேற்று (ஜூன் 11) நிலச்சரிவு சம்பவம் குறித்த அறிக்கையை வெளியிட்டு இருந்தார்.

அந்த அறிக்கையில் சாலையில் ஏற்பட்ட சம்பவத்திற்கான காரணம் தற்போது தெளிவாகியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூர் மக்கள் மற்றும் பாதசாரிகள் மீதான பாதுகாப்பைக் குறிக்கும் வகையில் பாதிக்கப்பட்ட பகுதியிலும் அதை சுற்றி உள்ள பகுதிகளிலும் பணிகள் பாதுகாப்பான மற்றும் திறமையான முறையில் மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்ப்பதாகவும், பொதுப் பயன்பாட்டு வாரியம் 2027 ஆம் ஆண்டின் முதல் பாதையில் கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் அப்பதிவில் தெரிவித்து இருந்தார்.

வூ பெய்மிங் அவசர கால அமைப்பு பணியாளர்களுக்கும், பொது பயன்பாட்டு வாரியம், கட்டிட மற்றும் கட்டுமான ஆணையம் மற்றும் நில போக்குவரத்து ஆணையம் ஆகியவற்றுக்கும் தனது நன்றியையும் அவர் தெரிவித்தார்.

கட்டிடம் மற்றும் கட்டுமான ஆணையம் (BCA) , மனிதவள அமைச்சகம் (MOM), மற்றும் நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) ஆகியவை இணைந்து நேற்று (ஜூன் 11) ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டு இருந்தனர்.

அந்த அறிக்கையில் இந்த திட்டமானது மீண்டும் தொடங்கப்பட வேண்டுமானால், பொதுப் பயன்பாட்டு வாரியத்தால் (PUB) நியமிக்கப்படும் புதிய திட்ட ஒப்பந்ததாரர் ஒரு புதிய கட்டமைப்பு வடிவமைப்பு முன்மொழியைத் தங்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

மேலும் அந்த முன்மொழிவு ஒரு விரிவான பாதுகாப்பு மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்பட்டு, அது BCA- வின் கட்டிட கட்டுப்பாட்டு ஆணையரால் அங்கீகரிக்கப்பட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் ஆணையங்கள் குறிப்பிட்டு இருந்தன.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK