சிங்கப்பூரில் நடந்த பயங்கரம்: மின்னல் தாக்கியதால் ஏற்பட்ட சோகம்..!!

சிங்கப்பூரில் நடந்த பயங்கரம்: மின்னல் தாக்கியதால் ஏற்பட்ட சோகம்..!!

சிங்கப்பூரில் பாசிர் ரிஸ் கடற்கரையில் நேற்று முன்தினம்(ஜூலை 5) ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 4.50 மணியளவில் நீர் விளையாட்டு ஈடுபட்டிருந்த பொழுது இந்த சோக சம்பவமானது நிகழ்ந்துள்ளது.

ஆடவர் தனது குடும்பத்தினருடன் கடற்கரையில் படக்கூட்டம் மற்றும் தொகுப்பு பலகை போன்ற நீர் விளையாட்டுகளில் ஈடுபட்ட இருந்துள்ளர்.

அப்போது வானம் தெளிவாக இருந்ததாகவும் திடீரென மின்னல் தாக்கியதாகவும் தெரியவந்துள்ளது. இதில் 24 வயதை சேர்ந்த இளையவர் இறந்துள்ளார்.

துடுப்பு பலகையில் நின்று கொண்டிருந்தபோது அவர் மீது மின்னல் நேரடியாக தாக்கியது இதில் அவர் சம்பவ இடத்திலேயே சுயநினைவை இழந்திருக்கிறார்.

அங்கிருந்த பொதுமக்களும் பிற குழுவினரும் அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்து அவசரகால மீட்பு படையினர் வரும் வரை அவருக்கு சிபிஆர் முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது.

சுயநினைவு இல்லாததோடு செங்காங் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்று பரிதாபமாக நேற்று(ஜூலை 6) காலை உயிரிழந்துள்ளார்.

அவரோடு நீர் விளையாட்டு ஈடுபட்டிருந்த 13 முதல் 54 வயதிற்கு உட்பட்ட மேலும் ஏழு பேர் சுயநினைவோடு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட தற்போதைய சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.

24 வயதை சேர்ந்த ஆடவர் மிக்காய்ல் பென்யமின் என்பவர் Outdoor Adventures நிறுவனத்தில் பகுதி நேர நீர் விளையாட்டு பயிற்றுவிப்பாளராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாசிர் ரிஸ் சுற்றுவட்டாரத்தில் இந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில் பொதுமக்கள் மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK