சிங்கப்பூரை உலுக்கிய பணிப்பெண் கொலை..!! முன்னாள் போலீஸ் அதிகாரிக்கு நீண்டகால சிறை உறுதி..!

சிங்கப்பூரை உலுக்கிய பணிப்பெண் கொலை..!! முன்னாள் போலீஸ் அதிகாரிக்கு நீண்டகால சிறை உறுதி..!

சிங்கப்பூரையே உலுக்கிய பர்மிய பணிப்பெண் பியாங் யாங் டான் கொடூரமாக துன்புறுத்தப்பட்டு உயிரிழந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் காவல்துறை அதிகாரி மற்றும் அவரது தாயாரின் கருணை கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு அவர்களுக்கு நீண்ட கால சிறை தண்டனையை சிங்கப்பூர் நீதிமன்றம் விதித்துள்ளது.


இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர் மியான்மரைச் சேர்ந்த 24 வயது பணிப்பெண் பியாங் ங்காய் டான் ஆவார். 2016 ஆம் ஆண்டில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கெவின் செல்வத்தின் வீட்டில் அந்தப் பெண் பணிபுரிந்து வந்துள்ளார்.

அந்தப் பெண்ணை 14 மாதங்கள் தொடர்ந்து பட்டினி போட்டும், கொடூரமாக தாக்கப்பட்டும் இறுதியில் மூளை காயம் ஏற்பட்டு அப்பெண் உயிரிழந்துள்ளார்.

அவர் இறக்கும்பொழுது அவரது உடல் எடை வெறும் 24 கிலோவாக மட்டுமே இருந்துள்ளது என்பது மிகக் கொடூரமான ஒன்றாகும்.

இந்த கொடூரக் குற்றத்தில் நேரடியாக ஈடுபட்ட செல்வத்தின் மனைவி மற்றும் மாமியாருக்கு ஏற்கனவே கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.

அவரது மனைவி காயத்ரி முருகையனுக்கு 30 ஆண்டுகள் வரை சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது சிங்கப்பூரில் பணிப்பெண் துன்புறுத்தல் வழக்கில் வழங்கப்பட்ட மிக நீண்ட சிறை தண்டனை ஆகும்.

கெவின் செல்வத்தின் மாமியார் பிரேமா நாராயணசாமிக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த துன்புறுத்தலைத் தடுக்காமல் உடந்தையாக இருந்ததற்காக சிங்கப்பூர் காவல்துறையில் பணியாற்றிய கெவின் செல்வம் பணி நீக்கப்பட்டு, அவர் மீது தனியாக வழக்கு தொடரப்பட்டது.

பணிப் பெண்ணை தூக்கி எறிந்தது, காயமடைந்த அவருக்கு மருத்துவ உதவி வழங்காமல் அலட்சியமாக இருந்தது மற்றும் சான்றுகளை அளிக்க முயன்றது போன்ற குற்றங்கள் காவல்துறையின் விசாரணை நிரூபிக்கப்பட்டுள்ளன.

கெவின் செல்வம் அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட தண்டனையைக் குறைக்க கோரி தாக்கல் செய்த இறுதி கருணை கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

அதனை தொடர்ந்து செல்வத்திற்குப் பல ஆண்டுகள் நீண்ட கால சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டு, அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிங்கப்பூர் அரசாங்கம் வெளிநாட்டு வீட்டு பணியாளர்களின் பாதுகாப்பில் மிகவும் உறுதியாக இருப்பதை இந்த தீர்ப்பு மூலம் மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது.