லிட்டில் இந்தியா HDB-ல் பயங்கர தீ விபத்து..!! உள்ளே இருந்தவர்களின் நிலை என்ன..?
சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா வட்டாரத்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக (HDB) அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஆகஸ்ட் 3ஆம் தேதி பயங்கர தீ விபத்து நிகழ்ந்துள்ளது.
லிட்டில் இந்தியா ரேஸ்கோர்ஸ் ரோடு (Race course Road)பிளாக் 684-ல் உள்ள 5-வது மாடி வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து இரவு 7:10 மணி அளவில் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படைக்கு (SCDF) தகவல் தெரிவிக்கப்பட்டது.
SCDF தீயணைப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு வீட்டில் படுக்கையறை ஒன்றில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த நிலையில், ஒரு வாட்டர் ஜெட் (water Jet) கொண்டு தீயணைப்பாளர்கள் தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் 5 பேர் சிக்கிக்கொண்டனர். அதில் ஒருவரை காவல் துறையினரும், மற்ற 4 பேரை SCDF வீரர்களும் பத்திரமாக மீட்டனர்.