Lalamove பார்சலை தூக்கி வீசிய ஊழியர்..? வைரலான வீடியோவால் சிங்கப்பூரில் பரபரப்பு..!

Lalamove பார்சலை தூக்கி வீசிய ஊழியர்..? வைரலான வீடியோவால் சிங்கப்பூரில் பரபரப்பு..!

சிங்கப்பூரில் குடியிருப்பு வளாகத்தின் கீழ் Lalamove டெலிவரி ஊழியர் ஒருவர் பார்சல்களை முறையாக கையாளாமல் தூக்கி வீசியதாகக் காட்டும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக Lalamove நிறுவனம் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது. 

TikTok தளத்தில் பதிவேற்றப்பட்ட காணொளியில், Lalamove எனக் குறிப்பிடப்பட்டிருந்த ஒரு வாகனத்தில் இருந்து டெலிவரி ஊழியர் ஒருவர் பார்சல்களை இறக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அப்போது, பார்சல்களை அருகில் நின்றிருந்த மற்றொருவரிடம் முறையாக ஒப்படைக்காமல், தூக்கி வீசுவது போன்ற முறையில் கையாளும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த வீடியோ இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.செப்டம்பர் 3ஆம் தேதி மதியம் 12 மணி நிலவரப்படி, அந்த வீடியோ 156,000-க்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.

வீடியோவைப் பார்த்த சில இணையவாசிகள், பார்சல்கள் சேதமடைந்து அல்லது பெட்டிகள் நசுங்கிய நிலையில் தங்களுக்கு கிடைப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

பார்சல்களை இவ்வாறு கையாள்வது பொருட்களுக்கு சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் டெலிவரி சேவைகளில் பார்சல்களை முறையாக கையாள வேண்டியதன் அவசியம் குறித்தும் சமூக வலைத்தளங்களில் விவாதம் ஏற்பட்டுள்ளது

. 

சம்பவம் தொடர்பாக Lalamove நிறுவனம் கூறியது பின்வருமாறு, சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொளி குறித்து தங்களுக்கு தெரியவந்துள்ளதாகவும், இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டு விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

ஆனால், காணொளியில் உள்ள வாகனத்தை மட்டும் வைத்து சம்பந்தப்பட்ட நபர் அந்த நேரத்தில் Lalamove தளத்தின் மூலம் டெலிவரி பணியில் ஈடுபட்டாரா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் நிறுவனம் கூறியுள்ளது.

Lalamove ஒரு on-demand delivery platform என்பதால், அதன் ஓட்டுநர் கூட்டாளர்கள் நிறுவனத்தின் தளத்திற்கு வெளியேயும் தனிப்பட்ட முறையில் டெலிவரி பணிகளை மேற்கொள்ளக்கூடும் என நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

பார்சல்களை கையாள்வது குறித்து நிறுவனத்தின் விதிமுறை: Lalamove, டெலிவரி பணியாளர்கள் பார்சல்களை எப்போதும் கவனமாகவும் தொழில்முறையாகவும் கையாள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

வைரலான காணொளியில் காணப்படும் வகையில் பார்சல்களை கையாளுவது நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு ஏற்ப இல்லை என்றும் Lalamove தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும், டெலிவரி ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் ஏற்கனவே உள்ளதாகவும், அவற்றை தொடர்ந்து நினைவூட்டி வருவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

விசாரணையின் முடிவில் விதிமுறைகளை மீறியது உறுதி செய்யப்பட்டால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் Lalamove கூறியுள்ளது.

தற்போதைய நிலையில், வைரலாகியுள்ள காணொளியில் இடம்பெற்றுள்ள நபர் அல்லது வாகனம் Lalamove தளத்தின் மூலம் அந்த நேரத்தில் பணியாற்றியதா என்பது உறுதி செய்யப்படவில்லை.

எனவே, விசாரணை முடிவடையும் முன் சம்பந்தப்பட்ட நபர் Lalamove நிறுவனத்தின் சார்பாகவே அந்த டெலிவரியை மேற்கொண்டார் என்று உறுதியாகக் கூற முடியாது. நிறுவனம் சம்பவத்தின் முழு விவரங்களையும் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளது.