சிங்கப்பூரில் போலி பிராண்டு பொருட்கள் விற்பனை..! 2 பெண்கள் கைது..S$180,000 பொருட்கள் பறிமுதல்..!!

சிங்கப்பூரில் போலியான வர்த்தக முத்திரைகள் கொண்ட பொருட்களை விற்பனை செய்ததாக சந்தேகிக்கப்படும் 2 பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நடவடிக்கையின்போது 900க்கும் மேற்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் மதிப்பு S$180,000க்கும் அதிகம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூர் போலீஸ் படையின் Criminal Investigation Department (CID) அதிகாரிகள் செப்டம்பர் 16ஆம் தேதி, Scotts Road பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்த 2 சில்லறை விற்பனை கடைகளில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின்போது, வர்த்தக முத்திரை விதிகளை மீறியதாக சந்தேகிக்கப்படும் ஏராளமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
போலீசார் பறிமுதல் செய்த பொருட்களில், பிரபல பிராண்டுகளின் கைப்பைகள், கைக்கடிகாரங்கள், ஆடைகள், காலணிகள், பல்வேறு அணிகலன்கள் உள்ளிட்ட 900க்கும் மேற்பட்ட பொருட்கள் இடம்பெற்றிருந்தன.
இந்த பொருட்களின் மதிப்பு S$180,000-க்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
போலீசாரின் சோதனை நடவடிக்கையின்போது 39 வயது மற்றும் 54 வயதுடைய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் இருவரும் போலியான வர்த்தக முத்திரைகள் கொண்ட பொருட்களை விற்பனை செய்ததாக சந்தேகிக்கப்படுகின்றனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சிங்கப்பூரின் Trade Marks Act சட்டத்தின் கீழ், போலியான வர்த்தக முத்திரை பதிக்கப்பட்ட பொருட்களை வர்த்தக நோக்கத்திற்காக வைத்திருப்பது அல்லது அவற்றை விற்பனை செய்வது குற்றமாகும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக S$100,000 வரை அபராதம் அல்லது 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம்.
போலி பொருட்களின் விற்பனை மற்றும் விநியோகம் என்பது அறிவுசார் சொத்துரிமையை மீறும் தீவிரமான குற்றம் என சிங்கப்பூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
போலி பிராண்டு பொருட்களை விற்பனை செய்து லாபம் ஈட்டும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.
அதேபோல், பொதுமக்களும் போலியான பிராண்டு பொருட்களை வாங்குவதிலும் விற்பனை செய்வதிலும் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்ட 2 பெண்கள் மீது அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
Follow us on : click here
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
