சாங்கி விமான நிலையத்தில் கொக்கெய்ன் பறிமுதல்..!!!!
சாங்கி விமான நிலையத்தில் கொக்கெய்ன் பறிமுதல்..!!!!
கடந்த (ஜூலை 29) சாங்கி விமான நிலையத்தில் 2 பெண்கள் தங்களது லக்கேஜ் பெட்டிகளை மாற்றிக்கொள்வதை மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் பார்த்துள்ளனர்.
பிறகு அதிகாரிகள், சம்மந்தப்பட்ட 5 வெளிநாட்டுப் பெண்களையும் கைது செய்தனர். அவர்களின் உடமைகளை கைப்பற்றி சோதனை செய்தபோது போதைப் பொருள் இருப்பது தெரிய வந்தது.
அப்பெண்களின் வயதானது சுமார் 21 வயது முதல் 48 வயது வரை இருக்கும்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் விளையாட்டுப் பொருளில் மறைத்து வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
அதில் சுமார் 27 கிலோகிராம் கொக்கெய்ன் மற்றும் 10 கிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டது.
கொக்கெய்ன் 30 கிராமுக்கு மேலாக வைத்திருந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை வழங்க வாய்ப்புள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை மேலும் நடந்து கொண்டிருக்கிறது.