தேயிலைத் தோட்டத்தில் தொடங்கி PhD வரை…!!யார் இந்த ரைஹான்…???

தேயிலைத் தோட்டத்தில் தொடங்கி PhD வரை...!!யார் இந்த ரைஹான்...???

சிங்கப்பூர்:“நான் ஒரு விவசாயியாக வேண்டும் என்று சிறுவயதிலிருந்தே விரும்பினேன், அந்தக் கனவை உண்மையில் நனவாக்க முடிவது ஒரு பெரிய ஆசீர்வாதம்,” என்று பரந்த புன்னகையுடன் பகிர்ந்தார் 32 வயதான ரைஹான்.

ஆறு ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூரில் ஆராய்ச்சியாளராக இருந்த வேலையை விட்டு, கிராமப்புற வாழ்க்கையை ஏங்கிய அவர் ஜப்பானின் கியோட்டோவுக்குப் புறப்பட்டார். அங்கு முதலில் தேயிலைத் தோட்டத்தில் தன்னார்வத் தொண்டு மூலம் அடிப்படை வேளாண் திறன்களை கற்றுக்கொண்டார். பின்னர் ஸ்ட்ராபெரி பண்ணையில் வேலை வாய்ப்பைப் பெற்றார்.

ஜப்பானில் விவசாய மக்கள் தொகை முதிர்ந்து வருவதால், ரைஹானின் பங்களிப்பு அங்குள்ள விவசாயிகளுக்கு புதிய ஊக்கமாக அமைந்தது.

தற்போது அவர் கியோட்டோ பல்கலைக்கழக வேளாண் பட்டதாரி பள்ளியில் முனைவர் பட்டம் செய்து வருகிறார். பாரம்பரிய உணவுகளின் கலாச்சார மதிப்புகளை ஆராயும் இவரின் இலக்கு,எதிர்காலத்தில் தனது அறிவை உலக விவசாயிகளுக்குப் பரப்ப வேண்டும் என்பது இவரது குறிக்கோள்.

 

“எப்போதும் சிங்கப்பூருக்குத் திரும்பலாம் என்கிற நிம்மதி உள்ளது. ஆனால் இப்போதைக்கு அது சரியான நேரம் இல்லை,” என்று ரைஹான் உறுதியாகக் கூறுகிறார்.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan