இண்டிகோ விமானங்கள் 150 க்கு மேல் ரத்து..!! திடீர் விமானிகள் பற்றாக்குறையின் காரணம் என்ன..??

இண்டிகோ விமானங்கள் 150 க்கு மேல் ரத்து..!! திடீர் விமானிகள் பற்றாக்குறையின் காரணம் என்ன..??

இண்டிகோ ஏர்லைன்ஸ், புதன்கிழமை (03.12.25) அன்று ரத்து செய்யப்பட்டதாலும் கடுமையான விமான தாமதம் ஏற்பட்டதாலும் பயணிகள் விமான நிலையங்களில் பல மணிநேரம் காத்திருந்தனர். மொத்தம் 150க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இண்டிகோ ஏர்லைன்ஸ் தற்போது விமானிகள் பற்றாக்குறையால் கடுமையான செயல்பாட்டு சிக்கல்களை எதிர்கொள்கிறது.

ஜூலை 1 மற்றும் நவம்பர் 1 தேதிகளில் இந்திய அரசாங்கம் விமானிகளுக்கான புதிய விதிகளை அறிமுகப்படுத்தியது. இந்த விதிகளின் படி, விமானிகளுக்கு போதுமான ஓய்வு நேரத்தை அதிகரித்தது.இதன் நோக்கம் விமானிகளின் சோர்வைத் தவிர்த்து, விமானப் பாதுகாப்பை மேம்படுத்துவதாகும்.

இந்த நடைமுறையால் ஒரே நேரத்தில் பணியில் ஈடுபடும் விமானிகளின் எண்ணிக்கை குறைந்ததால், இண்டிகோ நிறுவனத்துக்கு பணியாளர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதன் விளைவாக, பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டு, சில விமானங்கள் நீண்ட தாமதத்துடன் இயக்கப்பட்டன.

உள்ளூர் ஊடகங்கள் கூறுகையில், பல பயணிகள் 12 மணிநேரத்திற்கும் மேலாக தாமதமடைந்த விமானங்களுக்காக விமான நிலையங்களில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக தெரிவித்தது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK