கண்ணீருடன் உதவி கேட்ட பெண்.!மனிதநேயத்துடன் செயல்பட்ட SBS டிரான்சிட் ஊழியர்கள்!
சிங்கப்பூரில் பஸ்ஸில் தவறவிட்ட $32,000 மதிப்புள்ள தங்கம் மற்றும் ரொக்கப் பணத்தை கண்டறிந்து, அதை உரிய பெண்ணிடம் ஒப்படைக்க போக்குவரத்து ஊழியர்கள் உதவி உள்ளனர்.
‘K’ என்று குறிப்பிடப்பட்ட ஒரு பெண் பயணி, ஆங் மோ கியோவில் 853 எண் கொண்ட பேருந்தில் இருந்து இறங்கியபோது தனது பையை தவற விட்டுள்ளார்.
அந்த பைக்குள்ள அவரது கடவுச்சீட்டு (Passport) $2,000 ரொக்கப் பணம் மற்றும் கோலாலம்பூரில் நடக்கவிருந்த அவரது மகளின் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த $30,000 மதிப்புள்ள தங்க நகைகள் இருந்துள்ளன.
பதற்றத்துடன் கண்ணீர் மல்க பேருந்து நிலையத்தை அப்பெண் அணுகியுள்ளார். அங்கு பணிபுரிந்த மூத்த உதவி மேற்பார்வையாளர்கள் நித்தியானந்தன், பால்னி உடனடியாக உதவ முன்வந்துள்ளார்.
பையை மீட்க ஈஷூம் செல்ல அந்த பெண்ணிடம் பணம் இல்லாததை கண்டு மற்றொரு SBS Transit மேற்பார்வையாளரான அலெக்ஸ் டான் தனது சொந்தப் பணத்தில் அவருக்கு டாக்ஸி புக் செய்து அனுப்பி வைத்துள்ளார்.
போக்குவரத்து ஊழியர்களின் இந்த விரைவான மற்ற மனிதாபிமான நடவடிக்கையால் பல்லாயிரக்கணக்கான டாலர் மதிப்புள்ள பொருட்கள் அதே நாளில் அந்த பெண்ணிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியான சம்பவம் குறித்து SBS டிரான்சிட் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ Facebook பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளது.