காகித நிறுவன ஆலையில் தீ வைப்பு..!! தொழிலாளர் கைது ..!!
கனடாவில் ஒன்ட்டாரியோவில் (Ontario) உள்ள ஒரு காகித நிறுவன ஆலையில், தீ வைத்த குற்றத்திற்காக அங்கு பணிபுரியும் தொழிலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் ஆனது, செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) அன்று அதிகாலையில் கிம்பர்லி – கிளார்க் (Kimberly – Clark) என்ற காகிதப்பொருள் தயாரிப்பு நிறுவன ஆலையில் நடந்துள்ளது.
அப்துல்கரீம் பேஸ்புக் பக்கத்தில் ஒரு காணொளிப் பதிவிடப்பட்டிருந்தது. அந்த காணொளியில் ஒருவர் கழிப்பறையில் காகித உருளைகளுக்குத் தீ வைப்பது போன்று தெரிகிறது. அந்த தீ வைத்தவர் கரீம் தான் என்று நம்பப்படுகிறது.
அந்த காணொளியில் அவர், “நாங்கள் வாழத் தேவையான அளவுக்கு சம்பளம் வழங்கவில்லை என்றால், இதுபோன்ற செயல்களைச் செய்யாமல் இருப்பதற்காகவாவது சரியான சம்பளத்தை கொடுங்கள்” என்று கூறியுள்ளார்.
தீப் பரவுவதைக் கண்ட அவர் “இதோ உங்களது பொருட்கள் அழிந்து கொண்டிருக்கின்றன” எனவும் அந்த காணொளியில் பதிவிட்டிருந்தார்.