சிங்கப்பூர் பாதுகாப்பில் கவனம் தேவை - பிரதமர் வோங்
சிங்கப்பூர் பாதுகாப்பில் அதிக கவனம் தேவை என பிரதமர் வோங் இன்று (ஏப்ரல் 9) காலை மண்டாய் ஹில் படைத்தளத்தில் உள்ள ஆறாவது சிங்கப்பூர் டிவிஷன்/சென்ஸ் & ஸ்ட்ரைக் தலைமையகத்தை பார்வையிட்டபோது தெரிவித்தார்.
தற்போது கோரிமேகம் அதிகமாக இருப்பதால் ஆளில்லா அமைப்புகளின் பரவலான பயன்பாடு மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் ஒரு போக்காக மாறி வருகின்றன என்பதை சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.
புதிய தொழில்நுட்பங்களையும் ஆளில்லாம் அமைப்புகளையும் நமது செயல்பாட்டு கருத்தாக்கங்களில் சிறப்பாக ஒருங்கிணைப்பதற்காக இந்த அனுபவங்களிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
இது வாய்ப்புகள் மட்டுமல்லாது மதிப்பு மிக்க பாதுகாப்பு அமைப்புகள் மீது சமச்சீரற்ற அழுத்தத்தினை ஏற்படுத்தும் குறைந்த செலவிலான ட்ரோன் கூட்டத் தாக்குதல்கள் போன்ற புதிய சவால்களையும் ஏற்படுத்துகிறது என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த வேகமானது உத்ரேனில் தொடங்கியது மேலும் ஈரானில் நிலவும் சூழல் உக்ரைன் ஒரு தனிப்பட்ட நிகழ்வு அல்ல என்பதை காட்டியுள்ளது. இதனால்தான் நாம் நமது திறன்களைத் தொடர்ந்து வளர்த்துக்கொண்டு மற்றும் தரை கடல் மற்றும் விமான படைகளுக்கு இடையேயும் தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு குழுக்களுக்கு இடையேயமான ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்.
பிரதமர் பதவியேற்ற பிறகு லாரன்ஸ் அவர்கள் ஆறாவது காலாட்படை பிரிவின் உழவு மற்றும் தாக்குதல் பிரிவின் தலைமையகத்திற்கு மேற்கொள்கின்ற முதல் அதிகாரப்பூர்வ பயணம் இது. இவருடன் பாதுகாப்பு அமைச்சர் சான் சுன் சிங்கும் பங்கு பெற்றுள்ளார்.
கடந்த சில நாட்களாக ஆறாவது டிவிசனில் உளவு மற்றும் தாக்குதல் தலைமையகத்தில் நடத்தப்பட்ட மேம்பட்ட திறன் பயிற்சியில் ஆயுதப்படைகளின் அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த 1200க்கும் மேற்பட்ட ரிசர்வ் படையினர் முழுநேர தேசிய வீரர்கள் மற்றும் வழக்கமான சேவை வீரர்கள் பங்கு பெற்றனர்.
ஆறாவது பிரிவின் உளவு மற்றும் தாக்குதல் தலைமையாக தின் தலைமை அதிகாரியான கர்னல் க்யூ குவோஃபெங், இந்த பயிற்சிகள் முக்கியமாக புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் கருத்துக்களை கற்றுக் கொள்வதுடன் கட்டளை மற்றும் கட்டுப்பாடு தகவல் அமைப்புகளுடைய புதிய செயல்பாடுகளையும் அறிந்து கொள்வது உள்ளடங்கி இருந்ததாக தெரிவித்திருக்கிறார்.
மேலும் ராணுவம் வெளிநாட்டு மோதல்களை தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் அவற்றிலிருந்து நமது நாட்டின் தற்போதைய சூழலில் பயன்படுத்தக்கூடிய செயல்பாட்டு கோட்பாடுகளையும் அல்லது புதிதாக உருவாகும் செயல்பாட்டை யோசனைகளையும் கற்றுக்கொண்டு வருவதையும் அவர் சுட்டிக்காட்டி பேசி உள்ளார்.
சிங்கப்பூர் ஆயுதப்படைகள் முழுவதுமாக குறிப்பாக தரைப்படையில் சமச்சீர் அற்ற போர் திறன்களை வளர்த்து புதுமையான தீர்வுகளை ஊக்குவிக்கின்ற நேரத்தில் நடவடிக்கைகளை மிகவும் சிக்கனமான முறையில் நடத்துவதற்காக குறைந்த செலவிலான செயலாக்கு முறைகளையும் ஆராய்ந்து வருவதாகவும் கர்னல் கூறியுள்ளார்.
இறுதியாக சிங்கப்பூர் பிரதமர் கூறியதாவது: ஒரு சிறிய நாடாகிய சிங்கப்பூர் எரிசக்தி உணவு மற்றும் பிற விநியோக சங்கிலித் துறைகளில் மட்டுமல்லாது தமது பாதுகாப்பு திறன்களிலும் வருகின்ற பிரச்சனைகளை எதிர்கொண்டு தனது இயல் திறனை வலுப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.