100 -க்கும் மேற்பட்டோரைக் கைது செய்த சிங்கப்பூர் காவல்துறை..!! காரணம் என்ன..??
சிங்கப்பூரில் காவல்துறை 2 வார காலமாக அமலாக்க நடவடிக்கையில் ஈடுபட்டது. அந்த நடவடிக்கையில் மோசடி அல்லது பணக் கடத்தல்கள் சம்பந்தப்பட்ட வழக்கில் நூற்றுக்கணக்கானோரைக் காவல்துறை கைது செய்துள்ளது.
சந்தேகத்தின் பேரில் 251 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த 251 பேரும் 665 இருக்கும் மேற்பட்ட வழக்குகளில் ஈடுபட்டவர்கள்.
இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட மொத்த இழப்பானது $3.9 மில்லியன் தாண்டி உள்ளது.
காவல்துறை இன்று (ஏப்ரல் 9) ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மார்ச் 26 முதல் ஏப்ரல் 8 வரை, வர்த்தக விவகாரத் துறையும், ஏழு காவல் பிரிவுகளும் இணைந்து அமலாக்க நடவடிக்கை மேற்கொண்டதில், 251 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
மோசடி மற்றும் பணக் கடத்தல் மோசடிகளில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டவர்கள் 16 வயது முதல் 84 வயதுக்குட்பட்டவர்கள் . அதில் 172 ஆண்களும் 79 பெண்களும் அடங்குவர். 251 பேரும் காவல்துறையின் விசாரணைக்கு உதவுமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த நபர்கள் இணைய வழி வர்த்தக மோசடி, நண்பர்கள் போல ஆள்மாறாட்டம் செய்தல், அரசு அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்தல், முதலீட்டு மோசடிகள், வேலை மோசடிகள் மற்றும் வாடகை மோசடிகள் உள்ளிட்ட 665 இருக்கும் மேற்பட்ட மோசடி வழக்குகளில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த குற்றச்சாட்டுகளுக்காக அந்த நபர்கள் தண்டிக்கப்பட்டால், அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் வழங்கப்படும். மேலும் பணச்லவைக் குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் $5,00,000 அபராதமும் விதிக்கப்படலாம் அல்லது இரண்டு விதிக்கப்படலாம்.
உரிமம் இல்லாமல் பணம் செலுத்தும் சேவைகளை வழங்கிய குற்றத்திற்காக, அதிகபட்ச தண்டனையாக $1,25,000 அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் அல்லது இரண்டும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
மேலும் 2025 டிசம்பர் 30 முதல் மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு குறைந்தபட்சம் 6 பிரம்படி முதல் அதிகபட்சமாக 24 பிரம்படிகள் கட்டாயமாக வழங்கப்படும்.
மோசடி செய்பவர்களுக்குப் பணச்சலவை செய்தல், சிம் கார்டுகள் வழங்குதல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு, அவர்கள் விருப்பத்தின் பேரில் அதிகபட்சமாக 12 பிரம்படிகள் வழங்கப்படும்.
விசாரணையின் போது அதிக ஆபத்து உள்ளவர்களாக மதிப்பிடப்பட்டாலும், எச்சரிக்கப்பட்டாலும், அபராதம் விதிக்கப்பட்டாலும், குற்றம் சாட்டப்பட்டாலும் அல்லது தண்டிக்கப்பட்டாலும், அவர்கள் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுப்பதற்காக வங்கி சேவைகள் மற்றும் கைப்பேசி பயன்பாட்டில் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று காவல்துறை கூறியுள்ளது.