காவல்துறையின் அதிரடி வேட்டையில் சிக்கிய 342 பேர்..!!காரணம்..??

காவல்துறையின் அதிரடி வேட்டையில் சிக்கிய 342 பேர்..!!காரணம்..??

சிங்கப்பூர்:சிங்கப்பூர் காவல்துறை தீவு முழுவதும் ஒருங்கிணைந்த அமலாக்க நடவடிக்கையை மேற்கொண்டது.

இதில் மோசடி மற்றும் பண மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 342 ஆண்கள் மற்றும் பெண்கள் விசாரிக்கப்படுகின்றனர்.

காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், கடந்த மாதம் அக்டோபர் 24 முதல் நவம்பர் 6 வரை வணிக விவகாரத் துறை மற்றும் ஏழு போலீஸ் பிரிவுகள் இணைந்து இரண்டு வார அமலாக்க நடவடிக்கையை நடத்தியது.

இந்த நடவடிக்கையில், 15 முதல் 74 வயதுக்குட்பட்ட 114 பெண்களும் 228 ஆண்களும் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

 

போலீசார் கூறுகையில்,இவர்கள் மொத்தம் 870க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகளில் ஈடுபட்டிருப்பதாக நம்பப்படுகிறது.இதில் முக்கியமாக மின் வணிக மோசடிகள், முதலீட்டு மோசடிகள்,வாடகை மோசடிகள், நண்பர்கள் மற்றும் அரசு அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்யும் மோசடிகள் ஆகியவை அடங்குகின்றன.

 

இந்த மோசடிகள் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் S$6.57 மில்லியனுக்கும் அதிகமான தொகையை இழந்துள்ளனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

காவல்துறை பொதுமக்களை தங்களது தனிப்பட்ட வங்கி அல்லது Singpass தகவல்களை யாருடனும் பகிர வேண்டாம் என்றும் எந்த பண பரிமாற்றத்துக்கும் முன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.