கடந்த ஆண்டு(2025) மே மாதம் இந்த சிறுவன் குடியிருப்பு கட்டடத்தில் உள்ள 16 வது மாடியில் இருந்து கூரை மீது ஏற முயன்ற போது சத்தம் கேட்டதால் அங்கிருந்த குடியிருப்பாளர் ஒருவர் பயத்தில் காவல்துறையிடம் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
அந்த சிறுவன் அரை நிர்வாணமாக கூரையில் சுற்றி திரிந்துள்ளார். காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அப்போது அந்த சிறுவன் ஜன்னல் வழியாக ஒரு வீட்டிற்குள் நுழைந்து அங்குள்ள கட்டிலின் கீழ் மறைந்து கொண்டார் பிறகு அதிகாரிகளிடம் அவர் சரணடைந்து உள்ளார்.
இது போன்ற அபாயகரமான நடவடிக்கையில் ஈடுபட்டதால் நீதிமன்றம் இவருக்கு வயதை கருத்தில் கொண்டு 18 மாதங்களுக்கு நன்னடத்தை உத்தரவை பிறப்பித்துள்ளது.
சிறுவன் செய்த அத்துமீறிய நடவடிக்கை கடமையான குற்றமாக கருதப்படுகிறது ஆனால் வயதை கரத்தில் கொண்டு மறுவாய்ப்பு வழங்க உள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும் இவர் 80 மணி நேரம் சமூக சேவையில் ஈடுபட வேண்டும். அதோடு மனநல பரிசோதனைகளுக்கும் சிகிச்சைகளுக்கும் அவரது ஒத்துழைப்பை தர வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.