மலேசியாவின் சுற்றுப்புற துணைத் தலைமை அதிகாரி மீது ஊழல் வழக்கு..!!

மலேசியாவின் சுற்றுப்புற துணைத் தலைமை அதிகாரி மீது ஊழல் வழக்கு..!!

கோலாலம்பூர் : மலேசியாவின் சுற்றுப்புற பிரிவின் துணைத் தலைமை இயக்குநரான டாக்டர் நூர்ஹஸ்னி மட் சாரி (வயது 59) ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஏறக்குறைய 21,000 ரிங்கிட் அவர் ஊழலாக பெற்றதாக இன்று (ஏப்ரல் 3) கோலாலம்பூரில் நடைபெற்ற விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அவர் செய்த அந்த தவறை ஒப்புக்கொள்ளாமல் மறுத்துள்ளார்.

நீதிபதி முன்னிலையில் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டபொழுதும் அவர் குற்றங்களை செய்யவில்லை என்று மறுத்ததாக கூறப்படுகிறது.

ஒரு நிறுவனத்தின் இயக்குநரிடம் இருந்து 21,000 ரிங்கிட்டை, 6 பரிவர்த்தனைகள் மூலம் வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டதால் ம குற்றச்சாட்டுகள் அவர் மீது சாட்டப்பட்டுள்ளது.

இந்த குற்றங்கள் அனைத்தும் 2022 ஏப்ரல் 18 முதல் 2024 ஏப்ரல் 19 வரை வங்கியில் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

அரசாங்கத் துணை வழக்கறிஞரான அகமதாக் அக்ரம் ஹாரிப் , இரு தரப்பும் 25 ஆயிரம் உத்திரவாதத்தில் அவரை விடுவிக்க சம்மதித்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் இந்த வழக்கு முடியும் வரை குற்றம் சாட்டப்பட்டவர் அவரது கடவுச் சீட்டை முடக்க வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிபதியிடம் கேட்டுக் கொண்ட காரணத்தினால், கடவுள் சீட்டை உடனடியாக ஒப்படைக்க நூர் ஹஸ்தானுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கு மே 19ஆம் தேதி அன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK