சிங்கப்பூர் : TrulySG என்ற முகநூல் பக்கத்தில் ஏப்ரல் 12 அன்று MRT பெட்டிகளில், பொது இடங்களில் உங்களை அழகுப்படுத்திக் கொள்ளாதீர்கள் என்ற அறிவிப்பு அறிவிப்புப் பலகை பதிவேற்றப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பு பலகையின் அடிப்படையில், சுரங்க ரயிலில் ஒப்பனை செய்து கொள்ளவோ அல்லது நகங்களை வெட்டிக் கொள்ளவோ கூடாது என்பது பொருளாகும்.
வேறு சிலர் சுரங்கப் பாதையில் மக்கள் ஒப்பனை செய்துக் கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியும் எனவும் கூறியுள்ளனர்.
சுரங்கப் பாதையில் மக்கள் தங்களது நகங்களை வெட்டுவது அல்லது தலைவாரி கொள்வதோடு மட்டுமல்லாமல், தலைமுடிகளையும், நகங்களையும் பெட்டிகளில் விட்டு செல்வது அருவருப்பானதாகவும் சுகாதாரமற்றதாகவும் உள்ளதாக மாறுபட்ட கருத்துக்களைக் கூறியுள்ளனர்.
அந்த காணொளியில் வடக்கு – தெற்கு மற்றும் கிழக்கு – மேற்கு வழித்தடங்களில் உள்ள சில ரயில்கள் பயணிகளகளின் நலன் கருதி, அழகான, வட்ட வடிவ மற்றும் மனித உருவப்படங்கள் இடம்பெற்று இருந்தது.
மேலும் அதில் கைப்பிடிகளைப் பிடித்துக் கொள்வது, ரயில் பெட்டிக்குள் மேலும் நகர்ந்து செல்வது, தரையில் உட்காராமல் இருப்பது மற்றும் தனிப்பட்ட உடமைகளைக் கவனிக்காமல் விட்டு செல்லாமல் இருப்பது போன்ற நினைவூட்டல்கள் உருவப்படங்களும் காணப்பட்டன.
சுரங்கப்பாதையின் இந்த அறிவிப்பால் சில இணையவாசிகள் உதட்டு சாயம் பூசுவது மற்றும் ஒப்பனையை சரி செய்வது பாதிப்பில்லாதது எனவும் , இதைத் தடை செய்வது மிகவும் கடுமையானது எனவும் இணையதளத்தில் கூறி வருகின்றனர்.