வெளுத்து வாங்கும் கனமழை...!!! ஜூரோங் சாலையை மூடிய வெள்ளம்...!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் இன்று காலை (24.08.25) கனமழை காரணமாக ஜூரோங் டவுன் ஹால் சாலையில், ஜூரோங் கிழக்கு தெரு 11 க்கு முன்னால் பான் தீவு விரைவுச்சாலை நோக்கி திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
எனவே அதிகாரிகள் பொதுமக்களுக்கு காலை 9 மணி வரை அந்தப் பகுதியிலிருந்து விலகுமாறு அறிவுறுத்தினர்.
பொதுப் பயன்பாட்டு வாரியம் (PUB) இன்று காலை 7:49 மணிக்கு வெள்ள எச்சரிக்கையை வெளியிட்டது.
இதற்கு முன்னதாக யார்வுட் அவென்யூவிலிருந்து பிஞ்சாய் பூங்கா குடியிருப்பு பகுதி வரை டூனியர்ன் சாலையிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்று PUB தெரிவித்தது.
தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் (NEA) காலை 6:50 மணி முதல் 8:00 மணி வரை தீவின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என்று முன்னறிவிப்பு வழங்கியிருந்தது.