ஜோகூர் பாலத்தில் பயங்கர விபத்து..!! மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி..!!

ஜோகூர் பாலத்தில் பயங்கர விபத்து..!! மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி..!!

ஜோகூர் பாலத்தில் மே 16ஆம் தேதி அன்று அதிகாலை ஒரு பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் (38 வயது) உயிரிழந்த சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கப்பூரை நோக்கிய கடற்பாலச் சாலையில் அந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்த செய்தியை குடிநுழைவு சோதனை சாவடிகள் ஆணையம் (ICA) அன்று அதிகாலை 2:28 மணி அளவில் சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.

இந்த விபத்தால் அங்குள்ள 4 சாலை வழித்தடங்களில் 3 வழித்தடங்கள் மூடப்பட்டுள்ளன எனவும், வாகன ஓட்டுநர்கள் சற்று தாமதத்தை இதனால் எதிர் கொள்ளாமல் எனவும் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தது.

பின்பு சாலை வழித்தடங்கள் அனைத்தும் சரி செய்யப்பட்டு விட்டதாகவும், இனி வழித்தடங்களில் எந்த இடையூறும் இருக்காது எனவும் அன்று அதிகாலை 4:32 மணி அளவில் மற்றொரு பதிவை ஆணையம் வெளியிட்டிருந்தது.

அதிகாலை 2:00 மணிக்கு ஏற்பட்ட இந்த விபத்து குறித்த தகவல் காவல்துறைக்கும், சிங்கப்பூர் குடிமைப் தற்காப்புப் படைக்கும் (SCDF) தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் காயம் அடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை சிகிச்சைக்காக உட்லண்ட்ஸ் மருத்துவமனைக்கு SCDF வீரர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் அந்த ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்து விட்டார்.

அதிகாலை 2:00 மணிக்கு ஏற்பட்ட இந்த விபத்து குறித்த தகவல் காவல்துறைக்கும், சிங்கப்பூர் குடிமைப் தற்காப்புப் படைக்கும் (SCDF) தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் காயம் அடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை சிகிச்சைக்காக உட்லண்ட்ஸ் மருத்துவமனைக்கு SCDF வீரர்கள் அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் அந்த ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்து விட்டார்.

 

இறந்தவருக்கு மனைவியும் 8 வயது மகளும் இருப்பதாக காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.மோட்டார் சைக்கிள் சாலையில் சறுக்கியதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இந்த விபத்துக் குறித்த விசாரணையைக் காவல்துறை தொடர்ந்து நடத்தி வருகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK