சிங்கப்பூரில் மலேசியர் கைது..!!அரசு அதிகாரிகள் போல நடித்து மோசடி..!!

சிங்கப்பூரில் மலேசியர் கைது..!! அரசு அதிகாரிகள் போல நடித்து மோசடி..!!

சிங்கப்பூரில் அரசு அதிகாரிகள் போல் நடித்த ஆள்மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்ட காரணத்தால் மலேசியர் ஒருவரை சிங்கப்பூர் காவல்துறை கைது செய்துள்ளது.

29 வயதான அந்த மலேசியர் மீது இன்று (மே 4) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட உள்ளது.

சிங்கப்பூர் காவல்துறை நேற்று (ஏப்ரல் 3) வெளியிட்ட ஓர் அறிக்கையில், கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 30) அன்று பாதிக்கப்பட்ட ஒரு பெண் தங்களுக்கு புகார் அளித்ததாக கூறியுள்ளனர். அந்தப் பெண்ணிடம் சிங்க்டெல் நிறுவனத்தைச் சேர்ந்தவர் என்று கூறி அடையாளம் தெரியாத ஒரு நபர் தொலைபேசியில் அவரை அழைத்து ஆப்பிள் ஐபோன் ஒன்றை வாங்குவதற்கு தங்களது தகவல் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்காக நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

அதன் பிறகு அந்தப் பெண்மணி விசாரணையில் இருப்பதாகவும், மேலும் இது குறித்த தகவல்களுக்கு காவல்துறை புலனாய்வாளர்களைத் தொடர்பு கொள்ள வேண்டுமென்றும் அந்த நபர் கூறி உள்ளார். அந்தப் பெண்ணும் அவர் கொடுத்த whatsapp எண்ணைத தொடர்புக் கொண்டு புலனாய்வாளர் கூறிக்கொண்ட ஒருவருடன் காணொளி அழைப்பு மூலம் அவரது அடையாளத்தை சரிபார்த்து உள்ளார்.

பின்னர் கம்போடிய குற்ற கும்பலுடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் அந்தப் பெண்ணுக்கு தொடர்பு இருப்பதாக அந்த நபர் குற்றம் சாட்டி, விசாரணைக்கு ஒத்துழைப்பதற்காக அவரது சொத்துக்கள் அனைத்தையும் தெரிவிக்குமாறு அறிவுறுத்தி உள்ளார்.

அதை அந்தப் பெண்மணி பின்பற்றி தனது வங்கிக் கணக்கில் உள்ள அனைத்து நிதியையும் ஒரு கடன் அட்டைக்கு மாற்றி உள்ளார் பின்னர், $1,08,000 மதிப்புள்ள ரோலெக்ஸ் கைக் கடிகாரத்தை வாங்க அந்த அட்டையை i பயன்படுத்தி உள்ளார். பிறகு அந்த கைக்கடிகாரத்தை 29 வயது மலேசியரிடம் ஒப்படைத்துள்ளார். அதன் பிறகு தான் அந்தப் பெண்மணி தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்மணி கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் இது குறித்து விசாரணை செய்ததில், மோசடி தடுப்புப் பிரிவு மற்றும் காவல்துறைச் செயல்பாட்டு கட்டுப்பாட்டு மையம் அந்த நபரின் அடையாளத்தை உறுதி செய்து மே 2 – ஆம் தேதி அன்று அவரை கைது செய்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பெற்ற ரோலக்ஸ் கைக் கடிகாரத்தை மலேசியாவிற்கு கொண்டு வருமாறு அந்த நபருக்கு தகவல் கிடைத்ததாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள நபர் மீது ஊழல் போதை பொருள் கடத்தல் மற்றும் கடுமையான குற்றங்கள் சட்டத்தின் கீழ், நீதிமன்றத்தில் இன்று (ஏப்ரல் 4) குற்றம் சாட்டப்பட உள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், $5,00,000 வரை அபராதமும் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பணம் மற்றும் பிற மதிப்புமிக்கப் பொருட்களை வசூலிப்பதில் மோசடி கும்பல்களுக்கு உதவுவதற்காக மலேசிய நாட்டினர் சிங்கப்பூர் நாட்டிற்குள் வருவது அதிகரித்து உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூரில் இதுவரை மோசடி கும்பல்களுக்கு பணம் மற்றும் அதிக மதிப்புடையப் பொருட்களைப் பெற உதவியதற்காக மார்ச் மாதம் முதல் இன்று வரை சிங்கப்பூரில் கைது செய்யப்பட்ட மலேசியர்களின் மொத்த எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK