MOM - இன் புதிய அறிக்கை..!!
சிங்கப்பூரில் புலம்பெயர்ந்த ஊழியர்களுக்காக பொழுதுபோக்கு மையம்..!!
சிங்கப்பூரில் புலம்பெயர்ந்த ஊழியர்களுக்காக, சூன் லீ பொழுதுபோக்கு நிலையம் மற்றும் காக்கி புக்கிட் பொழுதுபோக்கு நிலையம் ஆகிய இரண்டும் சீரமைக்கப்பட உள்ளது.
அந்த மையங்கள் விரிவாக்கப்படுவதோடு அவற்றில் கூடுதல் வசதிகளும் சேர்க்கப்பட உள்ளது. அவற்றில் ஒன்று புலம்பெயர்ந்த ஊழியர்களுக்கான முதல் பொழுதுபோக்கு மையமாக உருமாற்றப்படும்.
சிங்கப்பூரில் புலம்பெயர்ந்த ஊழியர்களின் பலதரப்பட்ட சமூக பொழுதுபோக்கு தேவைகளை, ஆதரிக்கும் வகையில் இந்த 2 சீரமைப்பு திட்டங்களும் உருவாக்கப்படுகிறது என்று அமைச்சகம் கூறியுள்ளது.
இந்த மையங்களைத் துடிப்புமிக்க சமூக தளங்களாக உருமாற்றவும் MOM முடிவெடுத்துள்ளது.
அந்த மையங்களில் ஊழியர்கள் ஓய்வு எடுக்கலாம்; புதிய திறன்களை கற்றுக் கொள்ளலாம்; குடும்பம் மற்றும் நண்பர்களுடன் அவர்களது நேரத்தையும், உறவையும் வளர்த்துக் கொள்ளலாம் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த மையம் மூலம் 40 ஆயிரத்திற்கும் அதிகமான புலம்பெயர்த்த ஊழியர்கள் பயனடைய உள்ளனர். சீரமைப்பிற்கு பிறகு, இந்த மையத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பயன்பெற உள்ளனர்.
இந்த பொழுதுபோக்கு மையம் குறித்து மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசுதாஸ் மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற செலவின ஒதுக்கீட்டுக் குழு விவாதத்தில் அறிவித்தார்.
இந்த புதிய மையங்களில் கூடுதல் உணவு – பானத் தெரிவுகள், சில்லறை விற்பனை கடைகள், பொழுதுபோக்கு மற்றும் மேம்படுத்தப்பட்ட விளையாட்டு வசதிகள் முதலியவை இடம்பெறவுள்ளது.
நெருக்கடி காலகட்டத்தில் உடனடியாக அவசரப் பயன்பாட்டுக்கு ஏற்ப மருத்துவ சேவை நிலையங்களாகவோ அல்லது தடுப்பூசி நிலையங்களாகவோ இந்த மையத்தை மாற்றி அமைக்கக்கூடிய இடவசதியும் அங்கு உள்ளது.
இந்த இரண்டு மையங்களில் நடைபெறும் சீரமைப்புப் பணியானது 2030 ஆம் ஆண்டுகள் நிறைவடைந்து, புதுப்பொலிவுடன் வர உள்ளது.