சிங்கப்பூரில் புதிய 3D நடை மேம்பாலம்..!! எங்கே..??

சிங்கப்பூரில் புதிய 3D நடை மேம்பாலம்..!! எங்கே..??

சிங்கப்பூரில் நடை மேம்பாலம் முப்பரிமாண அச்சுத் தொழில்நுட்பத்தின் (3D) துணைகொண்டு கட்டப்படவிருப்பதாக நிலப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது. இந்த மேம்பாலம் 10 மீட்டர் நீளமும், 5 மீட்டர் அகலம் கொண்டு உருவாக்கப்பட உள்ளது.

இந்த நடை மேம்பாலம் ஜுரோங் கால்வாயில் அமைக்கப்படவுள்ளது. 10 மீட்டர் நீள பாலம் ஜுரோங்கிற்கும், தெங்காவுக்கும் இடையே செல்வதற்கான நேரத்தை குறைக்கும் வகையில் இருக்கும்.

5 மீட்டர் அகலமான பாலத்தை பாதசாரிகளும், சைக்கிள் ஓட்டிகளும் கடந்து செல்லலாம். இந்த பாலத்தை கட்டுவதற்கு பாதி மனிதவளம் மட்டுமே போதுமானது.

மனித வளத்தைப் பயன்படுத்தி 6 மடங்கு கட்டிடத்தை சீக்கிரமாக கட்டிவிடலாம்.

புதிய தொழில்நுட்பங்கள் கட்டமைப்பை உருவாக்கும் பணியை நிலப் போக்குவரத்து ஆணையம் மாற்றியமைக்க இருக்கிறது.

மேம்பாலத்தின் ஒவ்வொரு பகுதியையும் கட்டுவதற்கு 1 நாள் ஆகிறது. ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தில் 4 மணி நேரத்தில் ஒரு பகுதியைக் கட்டி முடித்து விடலாம்.

முப்பரிமாண அச்சுத் தொழில்நுட்பத்தை (3D) வைத்து கட்டுமானத்துறையில் ஆள் பற்றாக்குறையை சமாளிக்க முடியும் என்று நில போக்குவரத்து ஆணையம் கூறுகிறது. அதன் முன்னோட்டத் திட்டம் தான் இந்த புதிய 3D நடை மேம்பாலம்.

இந்த 3D நடை மேம்பாலம் 2028 திறக்கப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK