உலகில் தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை சமாளிப்பதற்கு சிங்கப்பூர் ஒரு புதிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அமெரிக்காவின் டெக்ஸஸ் மாநிலத்தில் உள்ள ஆஸ்டின் நகரில் ஏப்ரல் 13 (நேற்று) “என்டர்பிரைஸ் சிங்கப்பூர்” அமைப்பின் புதிய வெளிநாட்டு மைய திறப்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் சிங்கப்பூரின் துணை பிரதமர் கான் கிம் யோங் அவர்கள் பங்கேற்று இருக்கிறார்.
இந்த நிகழ்வில் துணை பிரதமர் பங்கேற்று கூறியது: பொதுப்படையான உலக நாடுகளுடன் தொடர்புள்ள வர்த்தகம் சார்ந்த நம்மை போன்ற பொருளியலை கொண்டுள்ள நாடுகள் முன்னேற்றம் காண்பதோடு மட்டுமல்லாது புதிய முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
நமது சந்தை ஈடுபாடானது இதன் மூலமாக குறுகல் அடையாமல் வளர்ச்சி வாய்ப்புகள் பெருகி எதிர்பாராத விளைவுகளை சந்திக்கும் நோக்கில் இருந்து விடுபடுவதற்கு இது ஒரு சிறந்த வழியாக இருக்கும்.
தனித்து ஒதுங்கிவிடும் பொருளியல் கொள்கைகளை நோக்கிய உலகளாவிய போக்குகளை தவிர்த்து நம்பிக்கையான நாடுகளோடு தமது ஒத்துழைப்பை சிங்கப்பூர் வலுப்படுத்த வேண்டும் என துணை பிரதமர் கான் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் ஓர் அணியாக தனித்து செயல்படுவதன் மூலமாக எந்த ஒரு பொருளியலும் தனித்து உருவாகாத போக்குகளை நாம் கட்டமைத்து விட முடியும். அதனோடு நமது பொருளியல் போட்டி தன்மையுடன் நீடித்த நிலைத்திருக்கவும் அந்த ஒற்றுமையை மேலும் வழிவகை காணும் என குறிப்பிட்டுள்ளார். வர்த்தக தொழில் அமைச்சர் மற்றும் துணை பிரதமருமான திரு கான்.
ஆஸ்டின் நகரில் திறக்கப்பட்டிருக்கின்ற வெளிநாட்டு மையம் அமெரிக்காவில் “எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு” திறந்து உள்ள நான்காவது மையம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நியூயார்க், லாஸ் ஏஞ்சலிஸ், சான் பிரான்சிஸ்கோ ஆகிய நகரங்களில் இந்த மையமானது ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கிறது.
சிங்கப்பூர் நிறுவனங்கள் அமெரிக்காவில் அதிலும் குறிப்பாக டெக்ஸஸ் மாநிலத்தில் வர்த்தக விரிவாக்கத்தை மேற்கொள்வதற்கு இந்த புதிய வெளிநாட்டு மையம் கை கொடுக்கும்.
சிங்கப்பூருக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இரு வழி வர்த்தகம் முதலீடு மற்றும் புத்தாக்க திறன்களுக்கான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும் இது ஒரு முக்கிய பங்கு வகிக்கும். மேலும் இரு தரப்பு வர்த்தகத்தில் டெக்ஸஸ் மாநிலம் கடந்த ஆண்டு(2025) கிட்டத்தட்ட US$9 பில்லியன் எட்டியுள்ளது.