தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அதிபர் மற்றும் பிரதமர்..!!

தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அதிபர் மற்றும் பிரதமர்..!!

தமிழ் வருட பிறப்பு நாளான இன்று (14.04.26) புத்தாண்டை கொண்டாடும் தமிழர்கள், சீக்கியர்கள், மலையாளிகள், வங்காளிகள் உள்ளிட்ட சிங்கப்பூரில் உள்ள இந்திய சமூகத்தினர் அனைவருக்கும் அதிபர் மற்றும் பிரதமர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் கூறிய வாழ்த்துரை:
“இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்” என்று தமிழில் தமது வாழ்த்து செய்தியை பிரதமர் வோங் தெரிவித்துள்ளார்.

“தமிழர்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களுடன் இன்று (ஏப்ரல் 14) புதிய வருடத்தை தொடங்குகின்றனர். சீக்கியர்கள் வைஷாகி திருநாளை கொண்டாடுகின்றனர் மற்றும் இதே நாளில் மலையாளிகள் விஷு பண்டிகை கொண்டாடுகின்றனர். அதேபோல மற்ற சமூகத்தினரும் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்” என பிரதமர் லாரன்ஸ் அவர்கள் தமது இன்ஸ்டாகிராம், முகநூல் பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.

இந்த பண்டிகையை கொண்டாட்டங்கள் வெவ்வேறு வழிகளில் வெளிப்படுத்தப்பட்டாலும் அதன் புதுப்பிப்பு புதிய தொடக்கம் எனும் பொதுவான உணர்வுகளை பகிர்ந்து கொள்கின்றன. இது நம் அனைவருக்கும் ஆன சிங்கப்பூர் எனும் இல்லத்தை வடிவமைக்கும் ஒரு செழிப்பான பன்முகத்தன்மையை எடுத்துக்காட்டும் விதமாக உள்ளது.

தற்போது உலகில் நிலவுகின்ற மாறுபட்ட சூழ்நிலை மத்தியில் இது போன்ற தருணங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைகின்றன. இதை நம் அனைவரையும் ஒன்றிணைப்பதுடன் ஒரே மக்களாக நம்மை பிணைத்து வைத்துக்கொள்ளும் உறவுகளையும் வலுப்படுத்துகின்றன என்று அவரது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

அதிபர் கூறிய வாழ்த்துரை:
அதிபர் தர்மன் சண்முக ரத்தினம் அவர்கள் தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் “பிரியாணியை பிடிக்காதவர்கள் எவரேனும் உண்டா..??” என குறிப்பிட்டுள்ளார்.

“எவருக்கேனும் பிரியாணி பிடிக்காமல் இருக்குமா..?? இன்று அது மிகச் சிறந்த இந்திய உணவாக கருதப்பட்டாலும் அதனை சுவைக்க இனம் சமயம் அல்லது பண்பாடு ஒரு தடையாக இருக்காது. என்னைப் போலவே மாட்டிறைச்சியை தவிர்ப்பவர்கள் என்றாலும் கோழி பிரியாணி ஆட்டு இறைச்சி பிரியாணி கடல் உணவு பிரியாணி என எப்போதும் புகழ்பெற்ற பலவகை உணவுகள் உண்டு என்று குறிப்பிட்டுள்ளார்.

தென்கிழக்காசியாவும் இந்த உணவிற்கு தனக்கு ஏற்பது போல புதிதாக மாற்றி அமைத்துள்ளது. சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் உள்ள உள்ள “நாசி பிரியாணி” மற்றும் வழக்கமாக உள்ள அச்சார் (ஊறுகாய்கள்) அல்லது சமைத்து அன்னாசி பழ துண்டுகள் மற்றும் தால்சா உடன் சேர்த்து பரிமாறப்படுகிறது.

இந்தோனேசியாவில் தேங்காய்ப்பால் மற்றும் உள்ளூர் மசாலா பொருட்களின் மனம் இதில் தூக்கலாக சேர்த்து மணம் சேர்க்கும்”. இன்று அதிபர் தர்மன் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.

சமூக கலாச்சார இளையத்துறை மற்றும் மனிதவள துணை அமைச்சர் தினேஷ் வாசுதாஸ் கூறிய வாழ்த்துரை:
சித்திரை தமிழ் புத்தாண்டு மற்றும் வைசாகி, புத்தாண்டு விழாக்களை கொண்டாடும் சிங்கப்பூரில் வாழும் நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் உலகில் பல அசாதாரண சூழ்நிலையை சந்திக்கின்ற நாம் என்றும் ஒற்றுமையாக அரசாங்கத்துடன் இணைந்து பல சவால்களை வெற்றியுடன் எதிர்நோக்குவோம் என்று தெரிவித்திருக்கிறார்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK