சிங்கப்பூரில் புங்கோல் விளையாட்டு மையம் திறப்பு...!! எப்போது..??
சிங்கப்பூரில் உள்ள புங்கோல் பிராந்திய விளையாட்டு மையத்தின் கட்டுமானப் பணிகள் கோவிட் – 19 பெருந்தொற்று காரணமாக தாமதமாகியிருந்தது. இந்நிலையில் அந்த விளையாட்டு மையத்தின் திறப்பு குறித்த செய்தி வெளியாகியுள்ளது.
புங்கோல் பிராந்திய விளையாட்டு மையம் இந்த ஆண்டின் (2020) இரண்டாம் பாதியில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விளையாட்டு மையத்தில் பூப்பந்து டென்னிஸ் மற்றும் பிற விளையாட்டுக்களுக்கான ஆடுகளங்களும் இடம்பெற உள்ளன.
புங்கோல் GRC நாடாளுமன்ற உறுப்பினரும், தேசிய வளர்ச்சி போக்குவரத்து துறையின் மூத்த இணை அமைச்சருமான சன் சூலிங், நேற்று (மே 4) அன்று இந்த செய்தியைப் பகிர்ந்துள்ளார்.
துணைப் பிரதமரும் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சருமான கான் கிம் யோங் மற்றும் புங்கோல் GRC – இன் உறுப்பினர்களான நாடாளுமன்ற உறுப்பினர் யான் வாங் லிங் ஆகியோருடன் இணைந்து மே 2 – ஆம் தேதி அன்று விளையாட்டு மையத்திற்கு சென்று புகைப்படங்களையும் அவர்களது முகநூல் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.
அவர்கள் பகிர்ந்து காணொளிகளில், சிங்கப்பூர் விளையாட்டு மன்றத்தின் பிரதிநிதியான டிங் டிங்குடன் உரையாடி, அந்த மையத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது மாடியில் உள்ள வசதிகளை அறிந்து கொள்வதும் தெரிகிறது.
மூன்றாவது மாடியில் உள்ள உள்ளரங்க உடற்பயிற்சி கூடத்தில் 20 பூப்பந்து ஆடுகளங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் 5 பீக் ஆடுகளாக பயன்படுத்தப்படும் என்று டிங் டிங் கூறியுள்ளார்.
நான்காவது மாடியில் உள்ள 3 டென்னிஸ் ஆடுகளங்கள் மற்றும் 6 வீ கார்டு களங்கள் ஆகியவை கூரையிடப்பட்ட வழிமுறை ஆடுகளாக உள்ளன. குழந்தைகள் குளம் மற்றும் போட்டிக்கான குளம் உள்ளிட்ட 6 நீச்சல் குளங்களும், மேலும் 5,000 பேர் அமரக்கூடிய அரங்கமும் மேலும் பிற வசதிகளும் அங்கே இடம் பெற்றுள்ளன.
இந்த திட்டமானது மிகவும் சிறப்பாக முன்னேறி வருவதாகவும் இந்த விளையாட்டு மையம், இந்த ஆண்டின் இறுதிக்குள் இருப்பாளர்களுக்காக திறக்கப்படும் என்று கான்கிம் யோங் தெரிவித்துள்ளார்.