தமிழக தேர்தலில் ஓட்டு போட்ட சிங்கப்பூரர்..!! அதிரடி கைது..!!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஓட்டு போட்ட சிங்கப்பூரர் கைது செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூரின் குடியுரிமை பெற்ற பாபநாசத்தை சேர்ந்த 51 வயது மும்தாஜ் பேகம் என்ற பெண் நடந்து முடிந்தால் தமிழக சட்டமன்றத் தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தின் பாபநாசம் பகுதியை அடுத்த பண்டாரவாடையைச் சேர்ந்தவர் இந்த மும்தாஜ் பேகம். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூர் குடியுரிமையைப் பெற்றுள்ளார்.
தமது சொந்த கிராமத்திற்கு கடந்த மாதம் (ஏப்ரல்) சென்ற அவர் சனிக்கிழமை (மே 16) அன்று சிங்கப்பூருக்கு செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு விமான நிலைய அதிகாரிகள் அவரது ஆள்காட்டி விரலில் வாக்களித்ததற்கான அடையாளம் இருப்பதை பார்த்தனர். பிறகு அவரது கடவுச்சீட்டை சரிபார்த்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சிங்கப்பூர் குடியுரிமையை மறைத்து தமிழக சட்டமன்ற தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களித்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்திய சட்டப்படி இரட்டை குடியுரிமை வைத்திருப்பதற்கு அனுமதி இல்லாத நிலையில், வெளிநாட்டுக் குடியுரிமைப் பெற்றவர் இங்கு வாக்களிப்பது என்பது மிகப்பெரிய குற்றமாக கருதப்படுகிறது.
இதனை அடுத்து திருச்சி விமான நிலைய அதிகாரிகள் முகேஷ் ராம் கவுதம் என்பவர் பாபநாசம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார், காவல்துறையினர் மும்தாஜ் பேகம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு உள்ளனர்.
இது போன்ற செயலில் ஈடுபடும் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றவர்களைப் பயணிக்க அனுமதிக்க வேண்டாம் எனவும், காவல் நிலையங்களில் அவர்களை ஒப்படைக்கும்மாறும் சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அறிவுறுத்தலின் பேரில் ஆஸ்திரேலியா,இலங்கை, கனடா ஐரோப்பா, அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் குடியுரிமைப் பெற்ற 25 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு வாரத்திற்கு முன்பு தொடங்கிய இந்த நடவடிக்கையானது இன்னும் நடைபெற்று வருகிறது.